Published:Updated:

தேர்தலில் காங்கிரஸ் தூக்கி எறியப்படும்: தா.பாண்டியன் ஆவேசம்!

தேர்தலில் காங்கிரஸ் தூக்கி எறியப்படும்: தா.பாண்டியன் ஆவேசம்!
தேர்தலில் காங்கிரஸ் தூக்கி எறியப்படும்: தா.பாண்டியன் ஆவேசம்!
தேர்தலில் காங்கிரஸ் தூக்கி எறியப்படும்: தா.பாண்டியன் ஆவேசம்!

சென்னை: இலங்கை தமிழர்களை காப்பாற்ற தவறிய காங்கிரஸ் கட்சியை நாடாளுமன்ற  தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்  தா.பாண்டியன் ஆவேசமாக கூறினார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில  செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

போராட்டத்தின்போது பேசிய தா.பாண்டியன்," இலங்கையில் போரின் போது தமிழர்களை  கொன்று குவிக்க இந்திய அரசு ராணுவ உதவியையும் பொருளாதார உதவியையும்  செய்தது. ஆனால், ராடார் உதவி மட்டுமே செய்தோம் என்று இந்தியா சொல்கிறது.  இந்திய அரசின் தவறான அணுகுமுறையால் இலங்கை தமிழர்கள் வாழ்வை  இழந்துள்ளனர்.

இல

##~~##
ங்கையில் இனிமேலும் தமிழர்கள் கொல்லப்படக்கூடாது. அவர்கள் காப்பாற்றப்பட  வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி  எறிவார்கள்" என்றார்.