Published:Updated:

திருப்பதியில் ராஜபக்சே சாமி தரிசனம்; பலத்த பாதுகாப்பு!

திருப்பதியில் ராஜபக்சே சாமி தரிசனம்; பலத்த பாதுகாப்பு!
திருப்பதியில் ராஜபக்சே சாமி தரிசனம்; பலத்த பாதுகாப்பு!
திருப்பதியில் ராஜபக்சே சாமி தரிசனம்; பலத்த பாதுகாப்பு!

திருப்பதி: இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.அவரது வருகையையொட்டி திருப்பதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,

இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று விமானம் மூலம் பீகார் மாநிலம் புத்த கயா வந்தார்.  விமான நிலையத்தில் அவரை முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் மாநில மந்திரிகள்,  அதிகாரிகள் வரவேற்றனர்.காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும்  அளிக்கப்பட்டது.

ராஜபக்சேவுடன் அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்சே மற்றும் 70 பேர் கொண்ட குழுவும்  வந்துள்ளது. வரவேற்பு முடிந்ததும் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோவிலில்  ராஜபக்சே சாமி தரிசனம் செய்ய சென்றார்.

##~~##
அதன்பின்னர் மதியம் அவருக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் விருந்து அளித்தார்.  ராஜபக்சேவை எதிர்த்து மகாபோதி கோவில் அருகே கம்யூனிஸ்ட் தொண்டர்கள்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் பீகாரிலிருந்து நேற்று மாலை திருப்பதி வந்த ராஜபக்சே  இரவு அங்கு தங்கி, இன்று  அதிகாலை 2. 30 மணியளவில் சுப்ரபாத தரிசனம் செய்தார்.சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் இன்று காலை 9.20 மணிக்கு திருப்பதி விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார்.


முன்னதாக, திருப்பதி அருகே ராஜபக்சேவிற்கு எதிராக மதிமுகவினர் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பதி ரயில் நிலையம் வைக்கப்பட்டிருந்த ராஜபக்சேவின் பேனர்களையும் கிழித்து எறிந்தனர். புத்தூர் அருகே ஆர்ப்பாட்டகாரர்கள் வந்த 50ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போராட்டங்களை தொடர்ந்து திருப்பதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிஆர்பிஃஎப் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பதி விமான நிலையத்திலிருந்து திருப்பதி கோயில் வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.