Published:Updated:

இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!

இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!
பிரீமியம் ஸ்டோரி
இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!

இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!

இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!

இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!

Published:Updated:
இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!
பிரீமியம் ஸ்டோரி
இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!
இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!

திமுகவின் ஸ்டார் பேச்சாளர், இரண்டு முறை வாரியத்தலைவர், மகளிரணி துணைச்செயலாளர் என பல முகங்களைக் கொண்டவர் சி.ஆர்.சரஸ்வதி. பொதுக்கூட்டம் ஒன்றை முடித்துவிட்டு வந்தவரிடம் பேசினேன்!

"எங்க சின்ன 'ராசா'லருந்து எம்எல்ஏ வேட்பாளா் - இந்த சினிமா டூ அரசியல் பிரவேசம் எப்படி?''

"சொந்த ஊரு புதுக்கோட்டை. எம்ஜிஆர்னா ரொம்பப் பிடிக்கும். நான் ஸ்கூல் படிக்கிறப்போ மௌலி சாரோட நாடகங்களில் நடிச்சிட்டு இருந்தேன்.

ஒருதடவை பாரதிராஜா சாரும் பாக்யராஜ் சாரும் நாடகம் பார்க்க வந்தாங்க. அப்போ என்னைப் பார்த்துட்டு 1979ல 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. அதுக்குப் பிறகு பாக்யராஜ் சாரோட மன்றங்கள் சார்பா நடக்குற நிகழ்ச்சிகள்ல கலந்துப்பேன்.
திரும்பவும் 1987ல பாக்யராஜ் 'எங்க சின்ன ராசா'வுல நடிக்கச் சொல்லி கேட்டார். ஹீரோயினா மட்டுமே நடிக்கணும்னு இருந்தப்போ இப்படி ஒரு  கேரக்டர் சொல்றாரேன்னு நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டேன்.  பார்த்திபன் சார்தான் பாக்யராஜ் சாரோட அசிஸ்டன்ட் அந்தப்படத்துல. 'இந்தப் படத்துல உங்க கேரக்டர்தான் வெயிட்டு!'னு சொல்லி நடிக்க வெச்சார்.
'அமைதிப்படை' படம் நடிச்சிட்டு இருந்தப்போ மனிவண்ணன் சார்கிட்ட அரசியல்ல சேரணும்னு ஆசையைச் சொன்னேன். அதிமுகவுக்குப்போக ஆசை. அப்போ 1995ல அதிமுகதான் ஆளும் கட்சியா இருந்துச்சு. ஆளும்கட்சியில சேர்த்துப்பாங்களானு தயக்கம் இருந்துச்சு. அப்போ இருந்தே திமுக மேல ஈடுபாடே இல்ல. 1995 கடைசில, பனகல் பார்க்ல வைகோ அண்ணாச்சியோட மீட்டிங்கிற்கு மணிவண்ணன் சார்கூடப் போயிருந்தேன். அந்த கூட்டத்துல திமுகவுக்கு எதிரா அவர் பேசுன அட்டாக் பேச்சுலதான் மதிமுகவுல என்னைய இணைச்சுக்கிட்டேன்.
திரும்பவும் 1999ல வைகோ பிஜேபிகூடவே போனதால பிடிக்காம ராதாரவி, எஸ்எஸ்சந்திரன் எல்லாம் அதிமுக போனாங்க. அவுங்க சேர்ந்த மூணுமாசத்துலயே நானும் அம்மாகூடவே சேர்ந்துட்டேன். என் அரசியல்ல மறக்கமுடியாத சம்பவம்னா அது அதிமுகல இணைஞ்சது தான்!''

"சசிகலாபுஷ்பா 'அதிமுக அடிமைகளின் கூடாரம்'னு சொல்லிருக் காங்களே?''

"நன்றி மறந்தவர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை.''

"இருந்தாலும் அமைச்சர்கள் வளைந்து குனிந்து வணக்கம் வைப்ப தெல்லாம் பார்த்தால் பொதுவெளியிலயும் அப்படிதானே பேசுறாங்க?''

"சட்டமன்றத்துல திமுகக்காரங்க அவ்வளவு கூச்சல் போடுறாங்க.எதிர்கட்சி தலைவராலேயே அவங்க உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியல.அவரே தன்னோட உறுப்பினர்கள் செஞ்சது தப்புன்னு மன்னிப்பு கேட்கிறார்.அதிமுகல அப்படி முடியுமா? அம்மா ஒரு பார்வை திரும்பிப் பார்த்தா போதும்.அவ்வளவு அமைதி இருக்கும். ராணுவக்கட்டுப்பாடோட ஒரு கட்சியை  நடத்த அம்மாவாலதான் முடியும். இந்தக் கட்டுப்பாடுமிக்க தலைமையை  நாங்க பெருமையாத்தான் நினைக்கிறோம். ஒரு குடும்பம் என்பது அதன் தலைவரோட கட்டுப்பாடுல இருக்கணும். அது முடியாததாலதான் எதிர்க்கட்சி அமளிதுமளி பண்றாங்க. திமுகல குடும்ப உறுப்பினர்களைத் தாண்டி பதவிக்கு வரமுடியாது. ஆனால் அதிமுகல கடைசித் தொண்டன் கூட எம்எல்ஏ ஆகலாம். அப்படிப்பட்ட தலைமையை சர்வாதிகாரம்னு சொல்றதெல்லாம் எதிர்க்கட்சியோட அரசியல்.''

"காவிரி பிரச்னையில ஊரே பத்தி எரியுது. செப்டம்பர் பதினாறு அனைத்துக்கட்சி பந்த் நடத்த அழைப்பு

இங்கே எப்போதும் ஒரே அம்மாதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விடுக்கிறாங்க. அதிமுக மட்டும் அதே தேதியில அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிட விருப்பமனு வாங்கிட்டு இருக்காங்களே?''

"காவிரி நூறுவருஷத்து பிரச்னை. ஐந்துதடவை முதல்வரா இருந்த கருணாநிதி என்ன செஞ்சாரு? காங்கிரஸ் கூட்டணியில இருந்தப்போ காவிரிக்காக கூட்டணியில இருந்து பதவி விலகுறோம்னு சொல்லிருப்பாரா? இப்போ கர்நாடகாவுல ஆட்சி பண்றது காங்கிரஸ்தானே? இங்க திமுக காங்கிரஸ் கூட்டணி தானே? இங்க உள்ள காங்கிரஸ்காரங்களோட சேர்ந்து சித்தராமையாகூட பேசவேண்டியதுதானே?

இன்னைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் சொல்லிருக்கு. இது யாரால? முழுக்க அம்மாவோட  தீவிர முயற்சியால மட்டுமே நடந்த விஷயம். அதை விட்டுட்டு ஒண்ணுமே செய்யமாட்றாங்கனு சொல்றெதெல்லாம் சும்மா.''

"இவர்களைப்பற்றி ஒரே வரியில் சொல்லுங்களேன்...''

கலைஞர்: குடும்பத்தலைவர்

வைகோ: நல்ல பேச்சாளார்

மோடி: டீக்கடையில் இருந்து பிரதமராக உயர்ந்த திறமையான தலைவர்

ஜெயலலிதா: நிகரற்ற, நினைத்ததை சாதிக்கக்கூடிய, தைரியமான, தன்னிகரில்லாத... (`மேடம் ஒரு வரியில சொல்லுங்க' என நினைவூட்டினோம்!) அம்மா வந்தாரை வாழவைக்கும் தலைவர்.

ஸ்டாலின்: அப்பாவை போலப் பிள்ளை

"சிறையில் பேரறிவாளன் தாக்கப்படுகிறார். விசாரணைக் கைதி ராம்குமார் தற்கொலைனு சொல்றாங்க. ஒரு முதல்வரோட பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு துறையில் இதுபோன்ற சம்பவங்கள், இதெல்லாம் சட்டம் ஒழுங்கு மீதான விமர்சனமாக பார்க்கப்படுகிறதே?''

"மற்ற மாநிலங்களைவிட, தமிழகம் சட்டம் ஒழுங்கு விவாகரத்தில் சிறப்பாகவே செயல்படுகிறது. ஒன்று இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றாலும், அதிலும் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வருகிறது. சாதிக்பாட்ஷா கொலை, அண்ணாநகர் ரமேஷ் கொலை, சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் இப்படி திமுகஆட்சியோட ஒப்பிடும்போது இந்த ஆட்சியில் இது மிகமிகக் குறைவு.  அம்மாவோட ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாகத்தான் திகழ்கிறது. அதில் மாற்றுக்கருத்தே இல்லை.''

"உங்களோட விவாதங்கள், விவாதத்தின் மீதான பதிலடியைப் பார்த்து `சின்ன அம்மா' சி.ஆர்.சரஸ்வதினு பட்டத்தோட ஃபேஸ்புக்ல எல்லாம் புகழ்றாங்களே?''


(சிரித்துக்கொண்டே...) "முருகா! இங்கே எப்போதும் ஒரே அம்மாதான். சின்ன அம்மா, பெரிய அம்மா அப்படி எல்லாம் யாரும் இல்லை. நான் அம்மாவோட சாதாரணத் தொண்டன். அம்மாவின் விசுவாசி. அவ்வளவுதான். நான் ஃபேஸ்புக்கே போறது இல்லப்பா. வாட்ஸப் மட்டும் தான். அதுவும்கூட கட்சிப் பணிக்காகத்தான். பொழுதுபோக்க நேரமே இல்லை தம்பி!''

- ந.புஹாரி ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism