Published:Updated:

மடங்களைக் கண்டால் மண்டியிடும் பி.ஜே.பி.! கர்நாடக கணக்கு பலிக்குமா?

மடங்களைக் கண்டால் மண்டியிடும் பி.ஜே.பி.! கர்நாடக கணக்கு பலிக்குமா?
மடங்களைக் கண்டால் மண்டியிடும் பி.ஜே.பி.! கர்நாடக கணக்கு பலிக்குமா?

மடங்களைக் கண்டால் மண்டியிடும் பி.ஜே.பி.! கர்நாடக கணக்கு பலிக்குமா?

தென்மாநிலங்களில் பி.ஜே.பி- ஆளும் வாய்ப்புள்ள ஒரே மாநிலமாக இருப்பது கர்நாடகா மட்டுமே என்பதால், அந்த மாநிலத்தில் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்று கடுமையாக முனைப்பு காட்டிவருகிறது பி.ஜே.பி தலைமை. ஆனால், காங்கிரஸ் கட்சி கடைசி நேரத்தில் கரைசேர்ந்துவிடும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது பி.ஜே.பி தரப்பை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

கர்நாடக தேர்தலில் ஆளும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வரும் மாநில பி.ஜே.பி கட்சியின் தலைவருமான எடியுரப்பாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவி வருவதால், ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தையாவது மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளது. இதற்காக ராகுல் காந்தி பல கட்ட பிரசாரங்களை கர்நாடகாவில் மேற்கொண்டுவருகிறார். வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும்  கர்நாடகாவில்  தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதேபோல், கடந்த முறை ஆட்சியைப் பறிக்கொடுத்த பி.ஜே.பி-யினர் இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா கடந்த ஆறுமாதத்துக்கு முன்பில் இருந்தே கர்நாடகத் தேர்தல் குறித்து தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு 52 பொறுப்பாளர்களை நியமனம் செய்து தொகுதி வாரியாக பிரசாரம் குறித்து வரைவு அறிக்கை தயார் செய்துள்ளார். பி.ஜே.பியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவும், அமித் ஷாவும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பிரதமர் மோடி பதினைந்து பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்ய துவங்கியுள்ளார். நேற்று உடுப்பியில் இருந்து தனது கர்நாடக தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளார்.உடுப்பியில் பேசிய மோடி “கர்நாடகத்தில் ஆளும் அரசில் உள்ள ஒருவரையாவது ஊழல் இல்லாதவர் என்று சொல்ல முடியுமா? லோக்ஆயுக்தாவின் தலைவர் மீதே தாக்குதல் நடைபெற்றது காங்கிரஸ் ஆட்சியில்” என்று கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும் தற்போது கர்நாடகாவில் பி.ஜே.பி புயல் வீசுகிறது என்று உணர்ச்சிபூர்வாக பேசியுள்ளார் மோடி. 

இந்நிலையில், பி.ஜே.பி தரப்பு இந்து சமூகத்தினர் வாக்குகளை முழுமையாக கவர வேண்டும் என்று கணக்கு போட்டுள்ளது. கர்நாடகாவில் பல்வேறு இந்து மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த மடங்களின் மடாதிபதிகளை பி.ஜே.பி தரப்பினர் சந்தித்து ஆதரவு கேட்டுவருகின்றார்கள். சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மடத்துக்கு அமி்த்ஷா விசிட் செய்தார். மடாதிபதி பாரதி தீர்த்த மஹாசுவாமியிடம் ஆசிபெற்ற அமித் ஷா பி.ஜே.பி தரப்பு வெற்றிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. சிருங்கேரி மடம் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியே இருக்கிறது. ஆனாலும், கர்நாடகாவில் இருக்கின்ற பல்வேறு மடங்களில் பி.ஜே.பி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. மேலும், பி.ஜே.பி-யின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, தான் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் விசிட் செய்துவிடுகிறார். ஒவ்வொரு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகளும் எடியூரப்பா பெயரில் நடைபெறுகிறது. 

ஆலயங்களையும், மடங்களையுமே பி.ஜே.பி தரப்பு இப்போது பெரிதாக நம்புகிறது. அதே நேரம் காங்கிரஸ் கட்சியும் அதே பார்முலாவை கையில் எடுக்க துவங்கிவிட்டது. சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கர்நாடகாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதசுவாமி ஆலயத்தில் சட்டையில்லாமல் வழிபாடு நடத்தினார். அதேபோல், ராகுலும் கர்நாடகாவில் புகழ்பெற்ற பல்வேறு ஆலயங்களுக்கும் விசிட் அடிக்க துவங்கியுள்ளார். இந்துக்களின் வாக்கை இருதரப்பு அறுவடை செய்யும் நோக்கில் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், பெரும்பாலான மடங்கள் பி.ஜே.பி தரப்புக்குச் சாதகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு