Published:Updated:

கூடங்குளம்: கமிஷன் பெறப்பட்டுள்ளதாக உதயகுமார் குற்றச்சாட்டு!

கூடங்குளம்:  கமிஷன் பெறப்பட்டுள்ளதாக உதயகுமார் குற்றச்சாட்டு!
கூடங்குளம்: கமிஷன் பெறப்பட்டுள்ளதாக உதயகுமார் குற்றச்சாட்டு!
கூடங்குளம்:  கமிஷன் பெறப்பட்டுள்ளதாக உதயகுமார் குற்றச்சாட்டு!

ராதாபுரம்: ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ள கமிஷன் காரணமாகத்தான் பிரதமர்  அலுவலகமும், இந்திய அணுமின் கழகமும் எந்த இழப்பு வந்தாலும்  அணுமின்நிலையத்தை இயக்கியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதாக  உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

அணுஉலை நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் வருகிற 15 ஆம்  தேதியன்று போராட்டம் நடத்தப்போவதாக மீனவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராதாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார்," கூடங்குளம்  அணுஉலையில் 3 முறை கசிவு ஏற்பட்டது என்று கூறிய மத்திய அமைச்சர்  நாராயணசாமி இப்போது இல்லை என்கிறார். அவர் இப்போது கூறுவது உண்மையா?  அல்லது முன்பு கூறியது உண்மையா? என்று தெரியவில்லை. அவர் கோடிக்கணக்கான  மக்களின் உயிரோடு விளையாடுகிறார்.

##~~##
பிரதமர் அலுவலகமும், இந்திய அணுமின் கழகமும் எந்த இழப்பு வந்தாலும்  அணுமின்நிலையத்தை இயக்கியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ள கமிஷன்தான். கூடங்குளம்  அணுமின்நிலையத்தை இயக்கினால்தான் அமெரிக்கா உதவியுடன் ஆந்திரா, குஜராத்திலும்  பிரான்ஸ் உதவியுடன் மகாராஷ்டிராவிலும் நிறுவப்பட உள்ள அணுமின்நிலையங்களுக்கு  கமிஷன் பெற முடியும்.
அதற்காகத்தான் கூடங்குளம் அணுமின்நிலையத்தை இயக்கும் நிர்ப்பந்தத்தில்  இருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி முதல் அணு உலையில் எரிபொருள்  நிரப்பப்பட்டது என்றால் இன்னும் ஏன் ஓட்டவில்லை.இதன் மூலம் அணு உலையில்  பிரச்சினை உள்ளது என்றுதான் அர்த்தம்.
அ.திமுக. மற்றும் திமுக கூடங்குளம் அணு உலை பற்றிய தங்களின் நிலைப்பாட்டை  உடனடியாக தெரிவிக்க வேண்டும்" என்றார்.