Published:Updated:

படுத்துக்கொண்டே 110 இடத்தில் வெற்றிபெறுவோம்: ராமதாஸ்

படுத்துக்கொண்டே 110 இடத்தில் வெற்றிபெறுவோம்: ராமதாஸ்
படுத்துக்கொண்டே 110 இடத்தில் வெற்றிபெறுவோம்: ராமதாஸ்
படுத்துக்கொண்டே 110 இடத்தில் வெற்றிபெறுவோம்: ராமதாஸ்

சென்னை: வருகிற சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், படுத்துக்கொண்டே 110 இடத்தில் வெற்றிபெறுவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  கூறியுள்ளார்.

சென்னை அருகே காரம்பாக்கத்தில் நடைபெற்ற தமது கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய  ராமதாஸ்," பாமகவுக்கு மகளிர் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. மகளிர் எந்த  கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி அமைப்பார்கள். ஆகவே, 2016  தேர்தலில் பாமக ஆட்சி அமைப்பது உறுதி.

##~~##
திராவிட கட்சிகள் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். வன்னிய சமுதாயத்தை நம்பியே  நான் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்திருக்கிறேன்.வருங்காலத்தில் அதிமுக,  திமுக, பா.ஜனதா ஆகிய எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கமாட்டோம்.
மற்ற கட்சிகளுக்கு சவாலாக சொல்கிறேன். வரும் தேர்தலில் படுத்துக்கொண்டே 110  இடத்தில் வெற்றிபெறுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு  கொண்டுவருவோம். இதை 6 மாதத்துக்குள் முடித்துவிடுவோம். ஒரு துளி சாராயம்  இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். அப்படி நிறைவேற்ற தவறினால் பதவியை  தூக்கி எறிவோம்" என்றார்.