சசிகலா என்றதும் இன்றைய தேதியில் சட்டென நினைவில் வருபவர் சசிகலா புஷ்பாவாகத்தான் இருக்கும். சசிகலா நடராஜன் மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோருக்கு இடையே உள்ள ஒற்றுமைகளும் வித்தியாசங்களும் இவை...

• சசிகலா நடராஜன்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சசிகலா புஷ்பா
• கட்சியின் அதிகார மையமாகச் செயல்பட கட்சியில் எந்தவிதப் பதவியும் தேவையில்லை என நிரூபித்தவர். விக்ரமன் படங்களின் சென்டிமென்ட்டை மிஞ்சும் அளவுக்கு எப்பேற்பட்ட சிக்கலான நேரத்திலும் தோழிக்குத் தோள் கொடுப்பவர்!

இவருக்கும் கட்சியில் தற்போது எந்தவிதப் பதவியும் கிடையாது. தனி ஆளாக கட்சியின் தலைமைக்கு சிக்கலைக் கொடுத்து மண்டை காய வைக்கலாம் என தூள் பட விக்ரம் போல செயல்படுபவர்.
• தன் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பது தாய்க்கு மட்டுமா தெரியும்? சின்ன அம்மாவுக்கும்கூடத் தெரியும். பல நிறுவனங்கள் அப்புகழ் பேசும்!

டெல்லிக் குளிரைத் தாங்கிக் கொள்ள தன் கடும் கோபத்தையே ஹீட்டராக்கி ஹாட்டாக்கியவர் இவர். வைரல் பெண்மணி!
• கணவர் முதல் சொந்தங்கள் வரை அனைவரையும் கட்சியில் இருந்து ஓரங்கட்டியபோதும்... அவ்வளவு ஏன் தன்னையே இரண்டுமுறை ஓரங்கட்டியபோதும்கூட தலைமையை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாதவர் இவர்!

பணிவுக்குப் பெயர்போன அமைச்சர்களைக் கொண்ட கட்சியில், தலைமையை எதிர்த்து பாராளுமன்றத்திலேயே பேசி பரபரப்பைக் கிளப்பியவர். ‘தனியறையில் தலைவர் என்னை அறைந்தார்’ என்பதெல்லாம் ஐஸ்க்ரீம் மீது செர்ரிப்பழம்!
• தலைமையின் பிரதிநிதியாக கட்சியின் அனைத்துச் செயல்களையும் மறைமுகமாகக் கவனித்துக்கொண்டவர். அதிகார மட்டத்தில் இன்றும் முக்கிய சக்தியாக வலம் வருபவர்.

கட்சியின் பிரதிநிதியாக தென்னாப்பிரிக்காவில் நடந்த மாநாட்டுக்கும், மாநிலங்களவைக்கும் அனுப்பப்பட்டவர். `என்னை எதுவும் செய்துவிட முடியாது’ எனச்சொல்லி தலைமைக்கு எதிராகவே திரி கொளுத்தியவர்!
• இவர் தனது தோழியை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. சிறை, வழக்குவிசாரணை, நீதிமன்றம் என உடன் சென்றவர். நம்பிக்கைக்குப் பெயர் போனவர்!

‘தலைமை எனக்கு விசுவாசமாக இல்லாதபோது, நான் ஏன் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்?’ எனக் கலகக் குரல் எழுப்பும் வித்தியாசப் பெண்மணி!
சரி, இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்: இருவருமே அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் துவக்கியவர்கள். இருவரது கணவர்களின் பெயரும் சைவக் கடவுளான சிவபெருமானைக் குறிப்பவை. இருவரின் ஊர்ப்பெயர்களிலும் ‘குடி’ குடிகொண்டிருக்கிறது. ஆம்...மன்னார்குடி, தூத்துக்குடி!
- கருப்பு
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி