Published:Updated:

'கருத்துகளுக்கு கடிவாளம் போடுவதா..?' பொங்கும் வைகோ

'கருத்துகளுக்கு கடிவாளம் போடுவதா..?' பொங்கும் வைகோ
'கருத்துகளுக்கு கடிவாளம் போடுவதா..?' பொங்கும் வைகோ

'கருத்துகளுக்கு கடிவாளம் போடுவதா..?' பொங்கும் வைகோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'சர்வாதிகார பாசிச ஆட்சியின் அணுகுமுறையை நினைவூட்டக்கூடிய வகையில் அ.தி.மு.க அரசு, கருத்துகளுக்கு கடிவாளம் போட நினைப்பது, கதிரவனைக் கைகளால் மறைக்கும் மூடத்தனம் போன்றது'' என்று தமிழக அரசை வைகோ எச்சரித்துள்ளார்.

தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநர், 25.04.2018 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர், அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும், பிற இயக்கங்களின் கருத்துகளைப் பரப்புவதையும், விவாதிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தப்பெறும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் கருத்து உரிமைகளையே நசுக்கும் வகையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு, இத்தகைய உத்தரவைப் பிறப்பித்தி  ருக்கிறது. வருங்கால தலைமுறையை வார்ப்பிக்கும் கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள், நாட்டின் தற்கால நிலைமைகளை உணரவும், கருத்து விவாதங்களில் ஈடுபடவும், கல்லூரிகளில் நடைபெறும் விழாக்கள் பெரிதும் பயனளிக்கின்றன. 

கல்லூரி மாணவர்களிடையே நாட்டு நலனுக்காக உழைக்கும் நல்லோர், அறிஞர் பெருமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து உரையாடுவது காலம் காலமாக இருந்துவரும் வழக்கம் ஆகும். கல்லூரி மாணவர்களின் இதயத்தில் லட்சிய விதைகள் ஊன்றவும், அவை வளர்ந்து பயிராகி சமுதாயத்தின் உயர்ந்த நிலைக்கு இளைஞர்கள், பல்வேறு துறைகளில் சிகரம் தொட்ட சாதனையாளர்களாக சுடர் விடவும் கல்லூரி விழாக்களும், அவற்றில் ஆன்றோர் சான்றோர் ஆற்றும் அரிய உரைகளும் அமைவது தொன்றுதொட்டு நடப்பதாகும்.

கல்லூரி மாணவர்களிடம் அரசியல் கருத்துகள் சென்றடைவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆங்கிலேயர் ஆட்சியில்கூட ஏற்பட்டது இல்லை. சர்வாதிகார பாசிச ஆட்சியின் அணுகுமுறையை நினைவூட்டக்கூடிய வகையில் அ.தி.மு.க அரசு, கருத்துகளுக்குக் கடிவாளம் போட நினைப்பது, கதிரவனைக் கைகளால் மறைக்கும் மூடத்தனம் போன்றது. தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழக மக்கள் பல்வேறு களங்களில் கிளர்ந்து எழுந்து போராடிவருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் சிந்தனைகளுக்கு விலங்கு பூட்ட நினைத்தால், அவர்களின் கருத்துரிமைப் போராட்டத்தைச் சந்திக்கும் நிலை உருவாகும் என்று எச்சரிப்பதுடன், கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு