Published:Updated:

கர்நாடகாவில் நடப்பது  `சித்த ரூபையா' அரசு - பிரதமர் மோடி விமர்சனம்!

கர்நாடகாவில் நடப்பது  `சித்த ரூபையா' அரசு - பிரதமர் மோடி விமர்சனம்!
கர்நாடகாவில் நடப்பது  `சித்த ரூபையா' அரசு - பிரதமர் மோடி விமர்சனம்!

கர்நாடகாவில் நடப்பது  `சித்த ரூபையா' அரசு - பிரதமர் மோடி விமர்சனம்!

கர்நாடகாவில் நடப்பது சித்தராமையா அரசு அல்ல,  `சித்த ரூபையா' அரசு எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒருவார காலமே உள்ளது. இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துவருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் என பா.ஜ.க தலைவர்கள் கர்நாடகாவை முற்றுகையிட்டுள்ளனர்.  இதேபோல, காங்கிரஸ் தரப்பிலும் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். இருவரின் பிரசாரத்தால், கர்நாடக அரசியல் களத்தில் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், கர்நாடக  மாநிலம் கலபுர்கியில் பிரசார கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது,  ``கர்நாடகாவில் முந்தைய பா.ஜ.க ஆட்சி இருந்தபோது நிறைய வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தற்போதோ, காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழல் செய்வதில் போட்டி போட்டுவருகின்றனர். இவர்களால் அதிக நீர்வளம் இருந்தும் கர்நாடகாவில் தண்ணீர் பிரச்னையைக்கூடத் தீர்க்க முடியவில்லை. 

ஸ்மார்ட் சிட்டிக்காக மத்திய அரசு வழங்கிய 836 கோடி ரூபாயில், 12 கோடி ரூபாய் மட்டுமே செலவுசெய்துள்ளனர். இதிலிருந்தே தெரிய வேண்டாமா மாநிலத்தில் வளர்ச்சி எந்த அளவுக்கு உள்ளது என்பது. மாநிலத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்கு தேசப்பற்றோ, ராணுவத்தை மதிக்கவோ தெரியவில்லை. அதற்குச் சான்றே, ராகுல் காந்தி வந்தேமாதரம் பாடல் ஒலிக்கும்போது அமர்ந்திருந்தது. இங்கு நடப்பது சித்தராமையா அரசு அல்ல,  `சித்த ரூபையா' அரசு. சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்பட்ட பெங்களூருவை பாவத்தின் பள்ளத்தாக்காக சித்தராமையா மாற்றியுள்ளார். சித்தராமையா அரசு ஊழல் கறை படிந்த அரசு. அவர்கள், ஊழலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு