Published:Updated:

நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்களின் பயணச் செலவை அரசு ஏற்க வேண்டும் - தமிழிசை கோரிக்கை

நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்களின் பயணச் செலவை அரசு ஏற்க வேண்டும் - தமிழிசை கோரிக்கை

மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கு இன்னமும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்திருக்கிறது தேர்வை நடத்தும் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்களை கேரளாவிலும், ராஜஸ்தானிலும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது, `தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். 

இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில், `தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே தற்போது தேர்வு மையங்களை அமைக்க அவகாசம் இல்லை' என்றும், `தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது' என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவிக்க, இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், `ஏற்கெனவே ஒதுக்கிய தேர்வு மையங்களில்தாம் நீட் தேர்வு எழுத வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருந்தும் ஏன் மாணவர்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுத வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். தமிழகத்தில் இருந்து ராஜஸ்தான், கேரளா போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் கிராமப் புற மாணவர்களின் வழிச்செலவு, தங்கும் வசதி மற்றும் மொழி போன்றவை மிகப்பெரிய தடையாக இருக்கும் என மாணவர்கள் அஞ்சுகின்றனர், இது அவர்களின் தேர்வுக்குத் தடையாக இருக்கும் எனவும் கருதுகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “நீட் தேர்வு மையங்களை மாணவர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். இந்த வருடம் அதிகப்படியான மாணவர்கள் பதிவிட்டதால் இங்குள்ள மையங்கள் நிறைந்து சிலருக்கு வேறு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் தவறுதான். தேர்வு மையங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த முறை கால அவகாசம் குறைவாக இருப்பதால். வெளிமாநிலங்களுக்கு நீட் எழுதச் செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய கால கட்டத்தில் பணபலம் இல்லாத. மன பலத்தோடு தேர்வைச் சந்திக்கத் தயாராகியிருக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசின் உதவி பக்கபலமாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். 

நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்களின் பயணச் செலவை அரசு ஏற்க வேண்டும் - தமிழிசை கோரிக்கை
அடுத்த கட்டுரைக்கு