Published:Updated:

'குட்கா விவகாரத்தில் எஸ்.பி மூர்த்திக்கும், விஜயபாஸ்கருக்கும் தொடர்பு'- ஸ்டாலின் பகீர்

'குட்கா விவகாரத்தில் எஸ்.பி மூர்த்திக்கும், விஜயபாஸ்கருக்கும் தொடர்பு'-  ஸ்டாலின் பகீர்
'குட்கா விவகாரத்தில் எஸ்.பி மூர்த்திக்கும், விஜயபாஸ்கருக்கும் தொடர்பு'- ஸ்டாலின் பகீர்

'குட்கா விவகாரத்தில் எஸ்.பி மூர்த்திக்கும், விஜயபாஸ்கருக்கும் தொடர்பு'- ஸ்டாலின் பகீர்

'குட்கா விவகாரத்தில் எஸ்.பி மூர்த்திக்கும், விஜயபாஸ்கருக்கும் தொடர்பு'-  ஸ்டாலின் பகீர்

' குட்கா விவகாரத்தில் எஸ்.பி.மூர்த்திக்கும் விஜபாஸ்கருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பகீர் தகவலைக் கூறினார்.

குட்கா வழக்கை திசை திருப்புவதற்காக தி.மு.க-வினர் மீது பொய் வழக்கு போடும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய ஸ்டாலின், "குட்கா வழக்கை திசை திருப்புவதற்கு ஆளுங்கட்சியினர் செய்த சதி வேலைகளை உடைத்தெறியவும் அதை மக்களுக்கு தெரியப்படுத்தவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவை மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் சேர்த்துதான் இந்தப் போராட்டம். கடந்த சில தினங்களுக்கு முன்பு  தடை செய்யப்பட்ட குட்காவை தயாரித்ததாக ஒரு  ஆலையில் சுமார் 18 மணி நேரம் சோதனை நடத்தியது.

திடீரென்று இந்த ரெய்டை நடத்த வேண்டிய அவசியம் இந்த அதிகாரிகளுக்கு ஏன் வந்துது? ஏனென்றால் சி.பி.ஐ விசாரணையை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. ஆய்வு நடத்த வேண்டாமென்று  நாங்கள் சொல்லவில்லை. நியாமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல்கிறோம் ஆனால், காவல்துறை என்ன செய்கிறது. நியாயமான விசாரணை வேண்டும் என்று போராடியவர்கள் மீது பொய் வழக்குப் போடுகிறது. வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று ஜனநாயக முறையில் போராடிய தி.மு.கவினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது இரவோடு இரவாக அவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். ஆனால், இந்த அநீதிக்கு தக்க பதிலடி கொடுக்க நாங்கள் கடைமைப்பட்டிருக்கிறோம். கோவை எஸ்.பி மூர்த்தி ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கட்டளையின் பேரில் தி.மு.கவுக்கு எதிரான  சதிவேலைகளைச் செய்திருக்கிறார். இப்போது ஆளுங்கட்சிக்கு அடிபணியும் அவர்  நாளை அமையப்போகும் தி.மு.க ஆட்சிக்கு  கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

யாரைக் காப்பாற்ற எஸ்.பி மூர்த்தி இப்படி பொய் வழக்குகளைப் போடுகிறார் என்று தெரியும். இந்த எஸ்.பி மூர்த்தி சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கரின் சொந்த மாவட்டத்தில் பணியாற்றியவர். எஸ்.பி மூர்த்திக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையில் என்னென்ன தொடர்புகள் இருக்கிறது என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. சி.பி.ஐ விசாரணை நேர்மையான முறையில் நடக்கும் என்று நம்புகிறோம்.  கொள்ளையெல்லாம் அடித்து முடித்திவிட்டு சிறைச்சாலைக்குப் போக வேண்டிய நேரத்தில் இந்த வழக்கை திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு துணைபோகும் அதிகாரி இந்த மாவட்டத்தில் இருப்பது வெட்கக்கேடு. அடுத்த ஆட்சி தி.மு.க ஆட்சிதான் அப்போது குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற துடிப்பவர்களுக்கும் எந்த தயவும் இல்லாமல் தண்டனை வாங்கிக்கொடுப்போம் என்று முடித்தவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க நிர்வாகிகளைப் பார்வையிடுவதற்காக சென்றார். அங்கே பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஸ்டாலின், நியாயமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும் காவல்துறை அதிகாரி எஸ்.பி மூர்த்தி மீதும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள். தண்டனையிலிருந்து தப்பிக்கவே தி.மு.கவினர் மீது இதுபோன்ற பொய் வழக்குகளைப் புனைகிறார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு