Published:Updated:

தமிழக மாணவர்களுக்கு உதவி..! கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

தமிழக மாணவர்களுக்கு உதவி..! கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு
தமிழக மாணவர்களுக்கு உதவி..! கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

தமிழக மாணவர்களுக்கு உதவி..! கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் தமிழக மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் உதவி மையங்கள் அமைக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு உதவி..! கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்கள் ஏராளமானோருக்குக் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்தநிலையில், நீட் தேர்வுக்காக கேரளா வரும் மாணவர்களுக்காகப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்களுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவர்களுக்குத் தேவையான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை அமைத்துத் தர அவர் உத்தரவிட்டுள்ளார். அவருடைய அறிவிப்புக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன. 

அடுத்த கட்டுரைக்கு