Published:Updated:

நிர்மலா தேவி விவகாரம் - விசாரணையை முடித்தார் சந்தானம்!

நிர்மலா தேவி விவகாரம் - விசாரணையை முடித்தார் சந்தானம்!
நிர்மலா தேவி விவகாரம் - விசாரணையை முடித்தார் சந்தானம்!

நிர்மலா தேவி விவகாரம் - விசாரணையை முடித்தார் சந்தானம்!

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் 3-வது கட்ட விசாணையை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் முடித்தார். பின்னர் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ``பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் எனது விசாரணை இன்றோடு முடிந்து விட்டது. 50-க்கும் மேற்பட்டவர்களை விசாரித்து இருக்கிறேன். தமிழில் பெறப்பட்ட விசாரணை விபரங்கள் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து எனது அறிக்கையை ஆளுநரிடம் மே 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க இருக்கிறேன். அதற்கான வேலைகளை நாளை முதல் சென்னையில் துவங்க இருக்கிறேன். எனது அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பிப்பேன். எனது அறிக்கைகளை ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளேன். ஆளுநர் அறிக்கைகளை  அரசிற்கு அனுப்பி வைப்பார். 

அரசு வேண்டுமானால் அறிக்கைகளை வெளியிடலாம். எனது அறிக்கைகளை வெளிப்படையாக நான் வெளியிட முடியாது. ஆளுநர் அந்த அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க இருப்பதாக ஏற்கனவே சொல்லி இருக்கிறார். இந்த அறிக்கையை வெளிப்படையாக அரசு வெளியிடுவது வெளியிடாதது அரசின் முடிவைப் பொறுத்தது. ஆனால் வெளியிட்டால் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் பாதிப்பு வரலாம். அதனால் அரசு இதற்கு உண்டான முன்னேற்பாடுகள் செய்து தான் வெளியிடும்" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு