Published:Updated:

கருணை மனு நிராகரிப்பு; வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு இன்னும் 14 நாளில் தூக்கு!

கருணை மனு நிராகரிப்பு; வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு இன்னும் 14 நாளில் தூக்கு!
கருணை மனு நிராகரிப்பு; வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு இன்னும் 14 நாளில் தூக்கு!
கருணை மனு நிராகரிப்பு; வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு இன்னும் 14 நாளில் தூக்கு!

புதுடெல்லி: சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன் மற்றும் ஞானப்பிரகாசம் ஆகிய 4 பேர்களது கருணை மனுக்களையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.

இதனால் இவர்களுக்கு விரைவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது

கடந்த திங்கட்கிழமையன்று பிரணாப் கருணை மனுக்களை நிராகரித்ததாக தெரியவந்துள்ளது.

பாலாறு வழக்கு

கடந்த 1993 ஆம் ஆண்டு பாலாற்றில் சந்தனக் கடத்தல் வீரப்பன் நடத்திய  குண்டுவெடிப்பு தாக்குதலில் 21 பேர் பலியாகினர்; 11 பேர் காயமடைந்தனர்

இந்த பாலாறு குண்டு வெடிப்பு உட்பட 3 வழக்குகளில் 124 பேர் மீது கர்நாடக அரசு   குற்றம் சாட்டியது.

இவ்வழக்கை விசாரித்த மைசூர் தடா நீதி மன்றம், 117  பேரை விடுதலை செய்து,  மீதமுள்ள 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

மேல் முறையீட்டில்  மேற்கூறிய 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை  விதித்து தீர்ப்பளித்த நிலையில்,அவர்கள் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல்  செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14 நாட்களில் தூக்கு

இந்நிலையில்  மீசை மாதையன் உள்ளிட்ட 4 பேர்களது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை கர்நாடக சிறைத் துறை டி.ஜி.பி. உறுதி செய்துள்ள நிலையில்,  இன்னும் 14 நாட்களில் இவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்றும், அது குறித்த தேதியை மாஜிஸ்திரேட் முடிவு செய்வார் என்றும் கர்நாடக காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

கைதிகள் 4 பேரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.