Published:Updated:

சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!

சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!
பிரீமியம் ஸ்டோரி
சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!

சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!

சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!

சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!

Published:Updated:
சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!
பிரீமியம் ஸ்டோரி
சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!

ரசியல், சினிமா என எந்தக் கேள்விக்கும் அட்ராசிட்டி பதில்கள் கொடுப்பவர், எஸ்.வீ.சேகர். பேட்டி என்றதும், `` `மணல் கயிறு-2'க்கு யு சான்றிதழ் கிடைச்சிருக்கு. குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். `யாருடா மகேஷ்' மதன்குமார் இயக்கியிருக்கார். நானும், விசுவும் முதல் பாகத்தில் நடிச்ச அதே கேரக்டர்ல நடிச்சிருக்கோம். முதல் பாகத்தில் வரும் கிட்டுமணி, நாரதர் நாயுடு குடும்பத்துல 34 வருடங்கள் கழித்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை. தீபாவளி முடிஞ்சு ரிலீஸ் ஆகும். பார்த்துட்டுச் சொல்லுங்க!'' என தன் படத்துக்குப் பப்ளிசிட்டி கொடுத்தபடியே ஆஜராகிறார்.

சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!

`` `தேர்தலில் நிற்கமாட்டேன்'ங்கிற உங்க நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும்..?''

``தேர்தல்ல நின்னது, ஜெயிச்சது எல்லாம் போதும். சினிமாவுல பார்க்குற நீதிமன்றத்துக்கும் நிஜத்துல இருக்கிற நீதிமன்றத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ, அதுபோலத்தான் சட்டசபையும்! `சட்டசபையில் இந்தப் பிரச்னை பத்திப் பேசுங்க'னு நம்மளை நம்பி ஒருத்தன் மனு கொடுப்பான். ஆனா, அங்கே ஒரு வார்த்தை பேசுறதுக்குள்ள தாவு தீர்ந்துடும். அது வெறும் `சத்தசபை'தான்!''

``காவிரிப் பிரச்னை..?'' (முடிக்கும் முன்பே)


 ``உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட்டா, கர்நாடக மக்களோட வெறுப்பைச் சம்பாதிக்கணும். அதனால, தங்களோட ஓட்டு வங்கி பாதிக்கும்னு சித்தராமையா நினைக்கிறார். இப்படியே முரண்டு பிடிச்சு, கடைசியில முதல்வர் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, `பி.ஜே.பி-தான் இதுக்குக் காரணம்'னு சொல்லி, அனுதாபம் தேடிக்கிட்டு ஆட்சியைப் பிடிச்சுடலாம்னு நினைக்கிறார். அது நடக்கவே நடக்காது. காவிரி மூன்றில் இரண்டு பங்கு தமிழ்நாட்டுலதான் பாயுது. உற்பத்தி ஆகுற இடத்துக்கு மட்டும் சொந்தமாகாது. ஆனா, இதுல நிறைய அரசியல் இருக்கு.

1970-க்குப் பிறகு இதைப் பெரிய அரசியல் ஆக்கிட்டாங்க. காவிரி ஓடினா, இங்கே மணல் அள்ள முடியாதுனு நினைக்கிறவங்களும் இருக்காங்க. இதை, இரண்டு மாநிலத்தின் ஈகோ பிரச்னையாகப் பார்க்காமல், வாழ்வாதாரப் பிரச்னையாகப் பார்க்கணும். நதிகள் இணைப்புதான் இதுக்குத் தீர்வு!''

``புதிதாகப் பொறுப்பேற்ற நடிகர் சங்க நிர்வாகிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுதே?''

``நடிகர் சங்கத்துல ஊழல் நடக்குறதா சொல்றவங்ககிட்ட, அதை நிரூபிக்கத்தான் சொல்றோம். எல்லாம் சரியாத்தான் இருக்கு. 2.50 கோடி கடனில் இருந்த சங்கத்துக்கு, இப்போ கடன் இல்லை. 7.50 கோடி ரூபாய் பேங்க்ல டெபாசிட் பண்ணியிருக்கோம். அப்புறம் எப்படி ஊழல் நடந்திருக்கும்? எல்லாத்துக்கும் வரவு-செலவு கரெக்டா இருக்கு. சரத்குமார் மீது காழ்ப்பு உணர்ச்சியோட செயல்படுறோம்னு சொல்றதும், அர்த்தமில்லாதது.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு!

`` `பாண்டவர் அணி'யோட அடுத்த இலக்கு தயாரிப்பாளர் சங்கமாமே?''

``நடிகரா இருக்கிறவங்க, தாயாரிப்பாளராவும் இருக்காங்க. அவங்க போட்டிபோட முடியாதுனு தடுக்க முடியாது. நேர்மையானவர்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கப்போறோம். நானும் நிற்கப்போறேன். ஏன்னா, கலைப்புலி தாணு தேர்தல்ல நிற்கும்போது எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்தார். எதையும் நிறைவேற்றவில்லை. சின்னப் படங்களுக்கு இருக்கிற பிரச்னைகள் இன்னும் அப்படியேதான் இருக்கு. அவர் தயாரிச்ச `கபாலி' ரிலீஸ் ஆகும்போது, ஒரு படத்தையும் ரிலீஸ் பண்ணவிடலை. ரஜினிமேல குறை சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. ஆனா, அவரைவெச்சு மிகப்பெரிய வியாபாரம் நடந்திருக்கு.''

``சென்சார் போர்டு மீது தொடர்ந்து விமர்சனங்கள் வருது. தீர்வு என்ன?''

``அகில இந்திய திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர்ங்கிற அடிப்படையில, எங்கிட்டேயே பலபேர் `கபாலி'க்கு யு சான்றிதழ் கொடுத்ததுக்குக் கேள்வி கேட்டிருக்காங்க. ஆனா, அதுக்குப் பதில் தணிக்கைக் குழுவின் மண்டல அலுவலர் மதியழகனும், அவரோட படம் பார்த்த அதிகாரிகளும்தான் சொல்லணும். அதே `கபாலி'க்கு ஆஸ்திரேலியா, மலேசியாவுல யு/ஏ கொடுத்திருக்காங்க. யு சான்றிதழ் வாங்கினாதான், தமிழ் சினிமாவுல வரிவிலக்கு. அதனால, `எப்படியாவது' அதை வாங்கிடுறாங்க. அதேமாதிரி, `பிராண்ட்' பெயரைச் சொன்னா, சென்சார்ல கட் பண்ணிடுவாங்க. `உத்தமவில்லன்' படத்துல `ஜானிவாக்கர் வாங்கிட்டு வா!'னு கமல் சொல்றார். அது ஸ்க்ரீன்ல அப்படியே வருது! இதெல்லாம் விசாரிக்கப்படணும்னு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கேன். தவிர, சென்சார் பிரச்னைகள் குறித்து யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்துக்குப் போகலாம். கண்டிப்பா இதுக்கு சட்டம் நடவடிக்கை எடுத்தாதான், குற்றச்சாட்டுகள் குறையும்!''

``சுவாதி கொலை வழக்கு..?''

``ராம்குமார் மரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தோட கடமை. குற்றம் நிரூபிக்கப்படாமலேயே ராம்குமார் இறந்துட்டார். குறைந்தபட்சம் அவர், குற்றமற்றவர்னு நிரூபிக்கப்படணும். இறந்துபோன ராம்குமார் `கொலையாளி'யாக சாகக்கூடாது என்பதுதான் என் கருத்து. நீதித்துறைமேல இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு. ராம்குமார் விஷயத்துல அது காப்பாற்றப்படும்னு நம்புறேன். உலகத்துல இருக்கிற எல்லா சட்டங்களும் இங்கே இருக்கு. ஆனா, சட்டங்கள் இங்கேதான் கொஞ்சம் `வளைய' ஆரம்பிக்கிறது, வருத்தத்துக்குரியது!''

- சி.ய.ஆனந்தகுமார், படங்கள் : என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism