Published:Updated:

வீரப்பன் கூட்டாளிகள் கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மேல் முறையீடு!

பெங்களூரு: சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் கருணை மனுக்களை  ஜனாதிபதி பிரணாப் நிராகரித்ததை எதிர்த்து,கர்நாடகா உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு வனப்பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு  நடந்த குண்டு வெடிப்பில் போலீசார் உட்பட 22 பேர் பலியானார்கள். இந்த வழக்கில்  முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

##~~##
கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த நிலையில் இந்த 4 பேரின் தூக்கு தண்டனை  உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேருக்கும் இன்னும் 14 தினங்களுக்குள்,   தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என கர்நாடக காவல்துறை டிஜிபி  தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் முடிவை  எதிர்த்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு  செய்யப்பட்டுள்ளதாக மேற்கூறிய 4 பேர்களது உறவினர்கள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.