Published:Updated:

பாலியல் வழக்கில் சிக்கிய பி.ஜே. குரியன் சோனியாவுடன் சந்திப்பு; பதவி விலகுகிறார்!

பாலியல் வழக்கில் சிக்கிய பி.ஜே. குரியன் சோனியாவுடன் சந்திப்பு; பதவி விலகுகிறார்!
பாலியல் வழக்கில் சிக்கிய பி.ஜே. குரியன் சோனியாவுடன் சந்திப்பு; பதவி விலகுகிறார்!
பாலியல் வழக்கில் சிக்கிய பி.ஜே. குரியன் சோனியாவுடன் சந்திப்பு; பதவி விலகுகிறார்!

புதுடெல்லி: பாலியல் வழக்கில் சிக்கிய மாநிலங்களவை துணைத் தலைவர்   பி.ஜே.குரியன், இன்று சோனியா காந்தியை நேரில் சந்தித்த நிலையில்,அவர் பதவி  விலகப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில், 16 வயது மாணவியை முக்கிய அரசியல் பிரமுகர்களும் உயர் அதிகாரிகளும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்   சாட்டப்பட்டு இருந்தனர்.

தொடர்ந்து 40 நாட்களாக, பல்வேறு சுற்றுலா தலங்களில் உள்ள விருந்தினர் விடுதிகளில் முக்கிய பிரமுகர்களால் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கில் தர்மராஜன் என்பவர் தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற 35 பேரும்   விடுதலை செய்யப்பட்டனர்.

##~~##
கர்நாடக மாநிலம் மைசூரில் காபி தோட்டம் வைத்திருக்கும் தர்மராஜன் என்பவருக்கு மட்டும், இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இருந்தது. ஆனால், பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், சூரியநெல்லி பலாத்கார வழக்கில் மாநிலங்களவை துணைத் தலைவரும்,   காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.ஜே.குரியனுக்கு தொடர்பு உண்டு என்று, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் உறுதி செய்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பி.ஜே.குரியனை பதவி நீக்கம் செய்ய   வேண்டும் என்றும், அவர் மீதான புகார் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று   கோரி கேரளாவில் பல்வேறு மகளிர் அமைப்புகள் போராடி வருகின்றன.
அத்துடன் கேரள சட்டசபையிலும் இந்த விவகாரம் தீவிரம் அடைந்து வருவதால், பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடி முற்றியது.
இந்நிலையில், குரியன் இன்று சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார்.
சோனியாவுடனான சந்திப்பை தொடர்ந்து, மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்து குரியன் விலகலாம் என்று தகவல்கள்   தெரிவிக்கின்றன.
 
குரியனுக்குப் பதிலாக துணைத் தலைவர் பதவியில் யாரை நியமிக்கலாம் என்பது குறித்த  ஆலோசனை பட்டியலில் காங்கிரஸை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட சிலரது   பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது  குறிப்பிடத்தக்கது.