Published:Updated:

``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''

``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''
பிரீமியம் ஸ்டோரி
``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''

``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''

``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''

``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''

Published:Updated:
``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''
பிரீமியம் ஸ்டோரி
``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''

ந்து பேர் பக்கத்தில் இல்லாவிட்டாலும் ஐம்பது பேர் திரும்பிப் பார்க்கிற மாதிரி பந்தாவாகக் கட்சிகள் துவக்குவது தமிழ்நாட்டில் ஒரு ஃபேஷனாகி வருகிறது. சில நாட்களுக்குமுன் மதுரை மஹபூப்பாளையத்தில் ஒரே கூட்டம். எம்.ஜி.ஆர். பாட்டுகளைத் தெறிக்கவிட்டுக்கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்தால், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலரும் இணைந்து புதுக்கட்சி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்களாம்! கூட்டத்தை விலக்கி, மேடையைப் பார்த்தேன். அடடே... எம்.ஜி.ஆரே அமர்ந்திருந்தார்!. ``அவரோட பேரு சக்கரவர்த்தி. எம்.ஜி.ஆர். ரசிகர், சினிமாவிலேயும் நடிச்சிருக்காரு, அவர்தான் கட்சியோட ஓனர்'' என்றனர் அங்கிருந்தவர்கள். அவருடன் ஒரு மீட்டிங்கைப் போட்டதில்...

``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''

``நான் புரட்சித்தலைவர் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு அலையறவன் கிடையாது. என்னுடைய இயற்கையான தோற்றமே அப்படித்தான். அதுதான் நான் அ.தி.மு.க-வில் உயர்ந்த பதவிக்கு வரவும் தடையாகவும் இருந்தது'' என எக்குத்தப்பான முன்னுரை கொடுத்தவரிடம், ``எம்.ஜி.ஆர். உருவாக்கியக் கட்சி தற்போது ஆட்சியிலிருக்கும்போது `புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதுக்கட்சி ஏன்?'' என்றேன்.

``எனக்குப் பூர்வீகம் ராஜபாளையம். மதுரையில் செட்டிலாகி ரொம்ப காலமாச்சு. சின்னவயசுல இருந்தே எம்.ஜி.ஆர்னா உயிர். அவர் படங்களைப் பார்த்தும், அவர் மேடையில் பேசுறதைப் பார்த்தும் அவரைக் கடவுளாகவே நினைக்கத் துவங்கிவிட்டேன். என் முகம், உடல் அமைப்பும் கிட்டத்தட்ட புரட்சித்தலைவர் போலவே அமைந்துவிட்டதால், என் உணர்வோடு கலந்துவிட்டார். நான் பல தொழில்களைச் செய்து சம்பாதித்து அ.தி.மு.க. கூட்டங்களுக்கும், தேர்தல் நேரத்திலும் செலவு செய்தேன். ஆனால், பல வருடங்களாக கட்சிக்காக உழைத்தும், எம்.ஜி.ஆர் புகழைப் பரப்பிவரும் எனக்கு ஒரு வட்டப்பிரதிநிதி பதவியைக்கூட தரவில்லை. என்னை பிழைப்புக்காக வேஷம் கட்டித் திரிபவன் என்று நினைத்து விட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''

இயற்கையாக அமைந்த முகத்தை எப்படி மாற்ற முடியும்? (இன்னும் பாயின்ட்டுக்கு வரலியே பாஸ்). என்னைப்போலத்தான் தமிழகம் முழுக்க உண்மையான எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கு எந்தப் பதவியும் கொடுக்காமல் புறக்கணித்து வைத்திருக்கிறார்கள்...அவமானப்படுத்துகிறார்கள். இதுகூடப் பரவாயில்லை, அ.தி.மு.கவை உருவாக்கிய புரட்சித்தலைவரின் பெயரையும், படத்தையும் இருட்டடிப்பு செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் புரட்சித்தலைவரின் கட்சியை மன்னார்குடி கும்பல் ஒன்று ஆட்டுவிக்கிறது. அவர்களுக்கும் அ.தி.மு.கவுக்கும் என்ன உறவு? அ.தி.மு.கவை சசிகலா குடும்பம் கைப்பற்ற திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து அதிமுகவை மீட்கத்தான் இக்கட்சியை துவக்கியுள்ளேன். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எங்கள் கட்சியில் சேர்வதற்கு மடை திறந்த வெள்ளமாய் வந்துகொண்டிருக்கிறார்கள்.

நானும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். என் சொந்தச் செலவில்தான் கட்சியைத் துவக்கியுள்ளேன். யாரிடமும் நன்கொடை வாங்கவில்லை. நான் புரட்சித்தலைவர் புகழ் பரப்பும் நோக்கில் `சக்கரவர்த்தி திருமகன்' என்ற படத்தை எடுத்தேன். அதை ரிலீஸ் பண்ணக்கூட ஜெயலலிதா உதவவில்லை. தியேட்டர் கிடைக்கவில்லை. ஜெயா டிவி சாட்டிலைட் ரைட்ஸை வாங்கவில்லை. அப்படத்தின் விளம்பரத்தைக்கூட ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பவில்லை'' என்றவர், தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தார், ``ஜெயலலிதா பேரில் டி.வி ஆரம்பித்தவர்கள் எம்.ஜி.ஆர் பெயரில் ஒரு டி.வி ஆரம்பித்தார்களா..? தற்போது நாங்கள் கட்சி துவங்கியவுடன், `எம்.ஜி.ஆர் படத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?' என்று சிலர் மிரட்டலாகக் கேட்கிறார்கள். அறிஞர் அண்ணா ஆரம்பித்த தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர் விலகி வரும்போது அண்ணாவைத் தன் கொடியில் பயன்படுத்தினார்.

``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை!''

அதுபோல எம்.ஜி.ஆர் துவக்கியக் கட்சியில் அவருக்கு மரியாதை இல்லை எனும்போது நாங்கள் அவரைக் கொண்டு வந்துவிட்டோம். அடுத்து கட்சியைப் பதிவு செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் ோட்டியிடுவோம். அடுத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொண்டு வருவதற்குப் பாடுபடுவோம்!'' எனச் சபதம் போட்டு முடித்தார்.

`கிர்'ராகி நான் கிளம்ப எத்தனித்தபோது கட்சியின் செய்தித்தொடர்பாளர் வெங்கடேஷ் வந்தார்.

``தன்னுடைய சொத்துக்களை விற்று எங்கள் தலைவர் அ.தி.மு.கவுக்கு செலவு செய்தார். மாதம் ஒன்றரை லட்சம் வருமானம் வரக்கூடிய சொத்தை விற்று எம்.ஜி.ஆர் புகழ்பாடும் சினிமாவை எடுத்த எங்கள் தலைவர், எம்.ஜி.ஆர் எடுக்க ஆசைப்பட்ட 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படத்தை எடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். அந்தப் பெயரை யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஃபிலிம் சேம்பரில் ரினிவல் செய்து வருகிறார். அப்படிப்பட்ட உண்மை விசுவாசிக்கு அ.தி.மு.கவில் மரியாதை இல்லை'' என்று முடித்தார்!

- பாம்பன் செ.சல்மான், படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism