Published:Updated:

2ஜி வழக்கு: சேவையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

2ஜி வழக்கு: சேவையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
2ஜி வழக்கு: சேவையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
2ஜி வழக்கு: சேவையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை உரிமம் ரத்தான நிறுவனங்கள் தங்களது சேவையை  உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை உரிமம் ரத்து செய்யப்பட்ட பின்னரும், பல தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகிறது.

இந்நிலையில், 2ஜி புதிய ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஏலத்தில்  பங்கேற்காத நிலையில், உரிமம் ரத்தான பின் சேவை வழங்கிய நிறுவனங்கள் 

##~~##
உடனடியாக தங்களது சேவையை ரத்து செய்ய வேண்டும் என்றும், உரிமம் ரத்தான  பிறகும் சேவையை வழங்கியதற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும்  உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 2ஜி மறு ஏலத்தில் பங்கேற்காத மற்றும்  ஏலத்தில் பங்கேற்றும் உரிமம் பெற இயலாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு  சேவையை உடனடியாக ரத்து செய்ய வேண்டியது தொலைத்தொடர்பு நிறுவனத்தின்  பணி. எனவே, உரிமம் ரத்தான நிறுவனங்களின் சேவையை உடனடியாக ரத்து செய்ய  வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.