Published:Updated:

தமிழ்நாட்டில் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும் காலம் வரும்: இல.கணேசன் நம்பிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் காலம் வரும் என்று  அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், இன்று காலை வீட்டில் தனது 68 ஆவது பிறந்த நாளை கொண்டினார்.

##~~##
அதைத்தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகமான கமலாயத்தில் தொண்டர்களை சந்தித்த அவர்,  தனது பிறந்த நாள் செய்தியாக, "உலக அரங்கில் பாரதம் தலைநிமிர தேசிய அளவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசியல் களத்திலும் தேசியம் தலை நிமிர வேண்டும், அதற்காக என்வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தொண்டாற்றுவேன்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முன் கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கே வர முடியாது என்று  கூறியுள்ளார். கடவுள் அருளால் அவர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் நாட்டிலும் பா.ஜனதா  ஆட்சிக்கு வருவதை காண வேண்டும்" என்றார்.

 காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கூறியிருந்த நிலையில், இல கணேசன் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.