Published:Updated:

இலங்கை கடற்படை தாக்குதல்: ராமேஸ்வரத்தில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் ! ( படங்கள் )

Vikatan Correspondent
இலங்கை கடற்படை தாக்குதல்: ராமேஸ்வரத்தில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் ! ( படங்கள் )
இலங்கை கடற்படை தாக்குதல்: ராமேஸ்வரத்தில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் ! ( படங்கள் )

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை  கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  டெசோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை கடற்படை தாக்குதல்: ராமேஸ்வரத்தில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் ! ( படங்கள் )

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை கண்டித்தும்,  அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் டெசோ அமைப்பு சார்பில் ராமேஸ்வரத்தில் இன்றும்  , நாளை நாகையிலும் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது  என திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை கடற்படை தாக்குதல்: ராமேஸ்வரத்தில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் ! ( படங்கள் )

அதன்படி இன்று காலை டெசோ அமைப்பு சார்பில் ராமேஸ்வரம் வட்டாட்சியர்  அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.  திருமாவளவன் எம்.பி., திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர்  சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.
 
இதில் திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன்  உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்,  மீனவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
ஆர்ப்பாட்டம் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நடைபெற்றதால் இதில்  பங்கேற்றவர்கள் தங்கள் சார்ந்த கட்சி கொடியை கொண்டு வரவில்லை. 

படங்கள்: பாண்டி