Published:Updated:

நான் பிரதமராக உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு மாயாவதி வேண்டுகோள்!

Vikatan Correspondent
நான் பிரதமராக உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு மாயாவதி வேண்டுகோள்!
நான் பிரதமராக உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு மாயாவதி வேண்டுகோள்!
நான் பிரதமராக உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு மாயாவதி வேண்டுகோள்!

நாக்பூர்: டெல்லி செங்கோட்டையில் தான் சுதந்திரக் கொடி ஏற்றும் வகையில் உழைக்க  வேண்டும் என்று தமது கட்சித் தொண்டர்களை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்  மாயாவதி கேட்டுக்கொண்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மகாராஷ்டிரா மாநில மாநாடு நாக்பூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாயாவதி,"அரசு பணிக்கான பதவி உயர்வில்  தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ்,  பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளுமே, லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட அரசு ஊழியர்களின்  உரிமையை மறுப்பதற்கு முனைப்புடன் செயல்பட்டன. இந்த கட்சிகளிடம் இருந்து  பகுஜன் சமாஜ் தொண்டர்கள் விலகியே இருக்க வேண்டும்.

தேர்தல்களின் போது உங்களை விலைபேச நினைக்கும் சக்திகளுக்கு நீங்கள் இரையாகி  விடக்கூடாது. விலைபோகக் கூடிய கடை சரக்காக நீங்கள் தடம்மாறி செல்லக்கூடாது.

##~~##
பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  போதிலும், மேலவையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மத்தியில் பகுஜன் சமாஜ்  கட்சியின் ஆட்சி அமைத்து இந்த மசோதாவை நிறைவேற்றுவேன் என உறுதியாக  கூறுகிறேன்.
மத்தியில் நமது ஆட்சி அமைந்து டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் பிரதமராக  நான் கொடியேற்றி, சுதந்திர தின உரையாற்றும் வகையில் நம் கட்சி தொண்டர்கள்  கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.