Published:Updated:

“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”

“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”

“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”

“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”

“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”

Published:Updated:
“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”

த்திய அரசைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதே தினம், போராட்டத்தைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கூலாக தங்களது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர் தமிழக பா.ஜ.க-வினர். கட்சியின் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”

``காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. அரசு கர்நாடகாவிற்கு ஒரு நிலைப்பாடு, தமிழகத்திற்கு ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுவது ஏன்?''

``தேசியம் வேறு, மாநிலம் வேறு. காவிரி விவகாரத்தில் பா.ஜ.க மட்டும் கர்நாடகாவுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. காங்கிரஸும்தான். இது இன்றைக்கு ஏற்பட்ட பிரச்னைபோல இங்குள்ள கட்சிகள் போராட்டம் செய்துவருகிறார்கள். பல வருடப் போராட்டமான இதை, பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி சரிசெய்யவில்லை. இந்தப் பிரச்னைக்கு எப்படி நிரந்தரத் தீர்வு காண்பது என்றுதான் நாங்கள் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. பிறகு, காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்வு என நீதிமன்றம் சொல்ல, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. இதில், இரட்டை வேடம் போடவில்லை!''

``காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு வழக்கறிஞர் முதலில் ஒரு கருத்தையும், பிறகு வேறொரு கருத்தையும் தெரிவித்துள்ளார். மேலாண்மை வாரியம் எப்போது அமைப்பீர்கள்?''


``முதலில் சொன்ன கருத்தை, `தெரியாமல் சொல்லிவிட்டேன்' என வழக்கறிஞரே சொல்லியிருக்கிறார். பிறகு, அரசோடு கலந்து ஆலோசனை செய்துதான், இரண்டாவது கருத்தைச் சொல்லியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும். தமிழகத்திற்குத் தண்ணீர் தரவேண்டும் என்பதில் மத்திய அரசும் உறுதியாக உள்ளது. நாங்களும் தமிழகத்திற்காகத் தொடர்ந்து பேசிவருகிறோம். ஆனால், காவிரி மேலாண்மைக்கு நாங்கள் எதிரானவர்கள் மாதிரி அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்திவருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது எதையுமே செய்யவில்லை. அத்தனை பழிகளையும் பா.ஜ.க ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இரண்டு மாநிலத்திற்கும் நிரந்தரத் தீர்வாக, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு கண்டிப்பாகக் கொண்டுவரும். காவிரி விவகாரத்தில் இங்குள்ள அரசியல் கட்சிகள் பா.ஜ.க மீது புழுதிவாரித் தூற்றுகிறார்கள். நாங்கள் பொறுமையாகவே இருக்கிறோம். இப்போது போராட்டம் நடத்தும் அத்தனை கட்சிகளுக்கும் விரைவில் பதில் சொல்லுவோம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”

``பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்திற்குக் கிடைத்த ஐந்து நல்ல திட்டங்களைக் கூறுங்களேன்?''

``பல ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி ஆட்சியில்தான் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அளவிலான திட்டங்கள் வந்துள்ளன. செங்கல்பட்டில் 330 ஏக்கரில் மருத்துவ தொழிற்பூங்கா அமைய உள்ளது. மருத்துவர் என்ற முறையில், இந்தப் பூங்காவினால் விளையப்போகும் பயன்கள் என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். இதுவரை கண்டுகொள்ளப்படாத தென்மாவட்டங்களின் தலைநகரங்கள் `ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றப்பட இருக்கின்றன. பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இமயம் துறைமுகத்திற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. `எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான பணிகள் நடைபெறுகின்றன. விவசாயிகளைக் காக்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வந்தால், விவசாயிகள் பிழைத்துக்கொள்வார்கள். தண்ணீர் வராவிட்டால், பயிர்க்காப்பீடு அவர்களுக்குத் துணையிருக்கும். இவ்வளவு திட்டங்களை நாங்கள் செய்திருக்கிறோமே... இதைப்பற்றி எல்லாம் இங்குள்ள கட்சிகள் ஒருவார்த்தை பேசியிருப்பார்களா? காவிரியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்யப் பார்க்கிறார்கள்.''

“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்!”

``ஒரு மருத்துவராக நீங்கள் முதல்வரின்  உடல்நிலை குறித்த தினசரி அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``மருத்துவராகச் சொல்ல வேண்டும் என்றால், அப்போலோவின் நிர்வாகத்தில் அளிக்கப்படும் அறிக்கையில் முன்னேற்றம் என்ற ஒன்றை மட்டுமே சொல்கிறார்கள். அது என்ன மாதிரியான முன்னேற்றம் என்பதைச் சொல்லாத தெளிவற்ற அறிக்கைதான் வந்துகொண்டிருக்கிறது. நோயைப் பற்றி முழுமையான தகவல்கள் இல்லாத அறிக்கை அது. இதை வைத்துக்கொண்டு எந்தக் கருத்தும் சொல்லமுடியாது. ஆனால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் உடல்நிலை குறித்து இப்படித்தான் அறிக்கை அளிக்க முடியும். முழுமையான அறிக்கை அளித்தால், அது பல்வேறு பிரச்னைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திவிடும். ஆகவே, தெளிவில்லாத அறிக்கையாக இருந்தாலும், இப்படி அறிக்கை விடுவதுதான் சாத்தியம்!''

``ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவரவேண்டும் என்ற சுப்பிரமணிய சாமியின் கருத்து?''

நாங்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டோம். மாநிலத் தலைவரோ, தேசியத் தலைவரோ சொல்லும் கருத்துதான், பா.ஜ.க-வின் கருத்து. நான் அப்படிக் கருத்து சொல்லியிருந்தால், நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளலாம். தவிர, எங்கள் கட்சி ஜனநாயகக் கட்சி. கட்சியில் இருந்தால், தனிப்பட்ட கருத்தாக அவர்கள் சொல்வதைக் கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.''

- அ.சையது அபுதாஹிர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism