Published:Updated:

மோடியை விமர்சித்து கட்ஜூ கட்டுரை: பா.ஜ. - காங்கிரஸ் மோதல்

Vikatan Correspondent
மோடியை விமர்சித்து கட்ஜூ கட்டுரை: பா.ஜ. - காங்கிரஸ் மோதல்
மோடியை விமர்சித்து கட்ஜூ கட்டுரை: பா.ஜ. - காங்கிரஸ் மோதல்
மோடியை விமர்சித்து கட்ஜூ கட்டுரை: பா.ஜ. - காங்கிரஸ் மோதல்

புதுடெல்லி: மோடியை விமர்சித்து கட்டுரை எழுதியபிரஸ் கவுன்சில் தலைவர்  மார்க்கண்டேய கட்ஜு பதவி விலக வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ள  நிலையில், காங்கிரஸ் கட்சி இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

கோத்ரா கலவரம் தொடர்பாக பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு  கட்டுரை எழுதியுள்ளார். அதில், "கோத்ராவில் என்ன நடந்தது, என்வெல்லாம் நிகழ்ந்தது  என்பது இப்போதும் மர்மமாகவே உள்ளது, 2002-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களில்  மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று கூறுவதை நம்புவது கடினம் என்று  கூறியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி,   மோடியை தனிப்பட்ட முறையில் கட்ஜு விமர்சனம் செய்திருப்பதாகவும், காங்கிரசுக்கு  விசுவாசமாக செயல்படும் கட்ஜு பதவி விலகிவிட்டு நேரடியாக அரசியலில் ஈடுபடலாம்  என்றும் கூறியிருந்தார்.

##~~##
மேலும் அக்கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா கூறுகையில்," ஒவ்வொருவருக்கும்  கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால் கட்டுப்பாட்டுடன் கருத்து தெரிவிக்க வேண்டும்.  பொறுப்புள்ள பதவியில் இருந்துகொணடு நினைத்ததையெல்லாம் பேசக்கூடாது" என்று   கூறியுள்ளார்.
இதற்கிடையே காங்கிரசுக்கு விசுவாசமாக கட்ஜு செயல்படுவதாக அருண் ஜெட்லி  குற்றம் சாட்டியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், ‘உச்சநீதிமன்ற  மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதியாக சிறப்பாக பணியாற்றியவர் கட்ஜு. தற்போது பிரஸ்  கவுன்சில் தலைவராக பணியாற்றும் அவர் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகிறார்.
அவர் மோடியைப் பற்றி கருத்து தெரிவித்ததுபோன்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேச  முதல்வர்கள் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். அப்போதெல்லாம் பா.ஜனதா  கட்சியினர் மவுனமாக இருந்தது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.