Published:Updated:

திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...

திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...
பிரீமியம் ஸ்டோரி
திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...

திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...

திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...

திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...

Published:Updated:
திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...
பிரீமியம் ஸ்டோரி
திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...
திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. எப்போதும் கொண்டாட்ட மன நிலையில் இருக்கும்  மதுரை மக்களுக்கு வருகிற 19ஆம் தேதி வரை நன்றாகப் பொழுது போகும்!

பாவம் போல இருக்கும் ஏ.கே.போஸ்தான் அதிமுக வேட்பாளர். இடைத்தேர்தல் என்பதால் அவருக்கு ரிஸ்க் இல்லை. ஓ.பி.எஸ். தலைமையில் அமைச்சர், எம்.எல்.ஏக்கள் பட்டாளமே முகாமிட்டுள்ளதால் அவர்களுக்குத்தான் கடுமையான வேலை. வேட்பாளர் `துருதுரு'ன்னு இருக்கணும் என்றா மக்கள் பார்க்கிறார்கள். திமுக சார்பாக `அகிலன்' பட ஹீரோவும் டாக்டருமான சரவணன் போட்டியிடுவதால் மக்கள் குஷியாக இருக்கிறார்கள். (நீங்க நடிச்ச படத்தைக் கிடத்தை போட்டுக் காட்டிராதீக..!)
பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் மனோதைரியத்தைக் கண்டுகளிக்கவும் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு இத்தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இது மட்டுமா? பள்ளி, கல்லூரியில் மாணவர் தேர்தல் என்று காதில் கேட்டுவிட்டால்கூட அங்கும் வேட்புமனுத் தாக்கல் செய்ய கிளம்பிவிடும் தேர்தல் கில்லியான பத்மராஜனும் திருப்பரங்குன்றத்தில் மனுத் தாக்கல் செய்துவிட்டார்.

இப்படி கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் வேட்பாளர்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்க, மதுரை மக்களுக்கு கூடுதல் என்டெர்டெயின்மென்ட் தருவதற்காக அரபு நாட்டு ஷேக் ஒருவர் களமிறங்கியிருக்கிறார்.

வேறு யாருமில்லை. நமக்கு அறிமுகமான நபர்தான், ராமநாதபுரம் அல்லாபிச்சை!

அரபு நாட்டுக்காரர்களே வந்து கெஞ்சினாலும் அரபி டிரெஸ்ஸைக் கழற்ற மாட்டேன் என்ற ஒரு கொள்கையுடன் இயங்கி வரும் அல்லாபிச்சை, 2004 லிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல்களில் பங்கெடுத்து (அரபி ஷேக் டிரெஸ்ஸையும் விடாமல்) முக்கியக் கட்சி வேட்பாளர்களுக்கு டஃப் (!) கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில்தான் இந்த முறை மாவட்டம் தாண்டி திருப்பரங்குன்றம் வந்துள்ளார். இடைத்தேர்தலில் வேட்புத் மனு தாக்கல் செய்ய வந்தவரிடம் பேசினோம்.

“கடந்த ஆண்டு குடியரசு தினத்தில் தென் தமிழ்நாடு முன்னேற்றக் கட்சியை துவக்கி, இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று அப்துல்கலாம் சமாதியிலிருந்து எங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை (கொள்கை, கோட்பாடெல்லாம் இருக்காம், அப்ப, பெரிய கட்சிதான்?) பொது மக்களிடம் தெரிவித்து வருகிறோம். (பதிலுக்கு மக்கள் என்ன சொன்னாங்க...?)

எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் இந்துக்கள் பத்துப் பேர். முஸ்லீம்கள் பத்துப் பேர். கிறிஸ்துவர்கள் பத்துப் பேர் உள்ளார்கள். (ஒருங்கிணைப்பாளர்களா, மொத்தமுள்ள உறுப்பினர்களா?)

நான்தான் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர். (அதான் தெரியுமே..!)

திருப்பரங்குன்றத்திலே மக்கள் சிரித்தால்...எங்கள் கட்சியின் நோக்கம், தென் தமிழ்நாட்டைத் தனியாகப் பிரித்து அதாவது 117 சட்டமன்றத் தொகுதிகளை மட்டும் தனியாகப் பிரித்து, மதுரையைத் தலைநகரமாக்கி தனி மாநிலமாக்குவதுதான். (லைட்டா கண்ணைக் கட்டுது...!)

ஏற்கெனவே ஹைகோர்ட் மதுரைக்கு வந்துவிட்டது. ஆந்திராவில் எப்படி தெலுங்கானாவைப் பிரித்து சிறப்பாக செயல்படுகிறார்களோ அதுபோல் நாமும் செயல்படலாம். காங்கிரஸ் ஆட்சியில் மதுவிலக்கு அமலில் இருந்தது. கருணாநிதி ஆட்சியில்தான் கள்ளுக்கடைகளைத் திறந்து விட்டார். எம்.ஜி.ஆர் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தார். அதற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்கள் மதுவென்னும் தொற்று நோயைப் பரப்பிவிட்டார்கள். அதன் மூலம் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் மதுவை ஒழிப்பது சிரமம்.

அதனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அவரவர் வருமானத்துக்கு ஏற்ப  பெர்மிட் கொடுத்து மது வழங்குவோம்.

அது மட்டுமல்ல, 750 வீடுகளுக்கு ஒரு வண்டியை வைத்து ரேஷன் பொருட்களை வீடுகளில் வந்து நேரில் தருவோம்.

தென் மாவட்ட பிரச்சனைகள் பற்றி நான் பிரதமர் மோடிக்கு இந்தியில் வாட்ஸ்ஆப் அனுப்பினேன். அவரும் செய்வதாகச் சொல்லியுள்ளார்.

கடந்த சட்ட மன்றத் தேர்தலில்  திருவாடானைத் தொகுதியில் போட்டியிடச் சென்ற எனக்கு இடைஞ்சல் செய்தார்கள். அதனால் பரவாயில்லை. எங்கள் கட்சிக்கு படித்தவர்கள், சிந்திப்பவர்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இப்போது உள்ளது.

இங்கும் நான் போட்டியிட யாராவது இடைஞ்சல் செய்தால், சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன்” என்றார் அல்லாபிச்சை.

நடக்கட்டும்... நடக்கட்டும்!

- செ.சல்மான்