Published:Updated:

`கர்நாடக முதலமைச்சராகிறார் குமாரசாமி!’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`கர்நாடக முதலமைச்சராகிறார் குமாரசாமி!’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு
`கர்நாடக முதலமைச்சராகிறார் குமாரசாமி!’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு

`கர்நாடக முதலமைச்சராகிறார் குமாரசாமி!’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு

கர்நாடக முதலமைச்சராக, வரும் புதன்கிழமை (23.5.2018) பதவியேற்க இருப்பதாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி தெரிவித்திருக்கிறார். 

Photo Credit:ANI

கர்நாடக முதலமைச்சராக கடந்த 2 நாள்களுக்கு முன்னர் பதவியேற்ற எடியூரப்பாவை, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட எடியூரப்பா, வாக்கெடுப்புக்கு முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  பின்னர், ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்த எடியூரப்பா, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். எடியூரப்பா ராஜினாமா செய்ததன்மூலம் ஜனநாயகம் வெற்றிபெற்றதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துதெரிவித்தனர். 

இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற குமாரசாமி, காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களை அளித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்றிருந்தனர். ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, `ஆளுநர் எங்களை ஆட்சியமைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, வரும் புதன்கிழமை (23.5.2018) மதியம் 12 முதல் 1 மணிக்குள் நான் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளேன். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி ஆகியோர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அனைத்து மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க இருக்கிறேன். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நானே நேரில் சென்று அழைப்பு விடுக்க இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு