Published:Updated:

சென்னை வந்தார் ஜனாதிபதி பிரணாப்!

சென்னை வந்தார் ஜனாதிபதி பிரணாப்!

சென்னை: பிஎஸ்எல்வி சி20 ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வந்தார்.

சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து இன்று மாலை 5.56க்கு பிஎஸ்எல்வி சி20 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் பார்வையிட உள்ளார்.

##~~##
இதற்காக இன்று மதியம் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தார் பிரணாப் முகர்ஜி. விமான நிலையத்தில் அவரை, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து  ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டுச் சென்றார் பிரணாப்.