Published:Updated:

“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”

“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”

“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”

“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”

“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”

Published:Updated:
“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”
“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”

“ ‘முதல்வன்’ படத்தில் ஒருநாள் முதல்வராக அர்ஜூன் கலக்கியது மாதிரி, கவுன்சிலராக நான் ஐந்து ஆண்டுகள் கலக்கவேண்டும்’’ இதுதான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் என்கிறார், கானா பாலா. சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட உள்ள அவரிடம் சில கேள்விகள்...

‘`நான் தேர்தலில் நிற்பது இது முதல் முறையல்ல. 2006-ம் ஆண்டு முதன் முதலில் எனது வார்டில் போட்டியிட்டு, 1319 வாக்குகள் பெற்றேன். அதே வார்டுக்கு மறுதேர்தல் நடைபெற்ற போது 4142 வாக்குகள் பெற்றேன். 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எனது கன்னிகாபுரம் வார்டில் நின்று 4416 வாக்குகள் பெற்றேன். அப்போது நான் திரைப்படத் துறையில் நுழைந்து புகழடைந்த பிறகு இப்போது மீண்டும் அதே கவுன்சிலர் பதவிக்கு நிற்க உள்ளேன். வெற்றி பெற தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்!’’ அதிரடியான என்ட்ரியுடன் ஆரம்பித்தார் கானா பாலா.

‘`அரசியல் ஆசை எப்படி வந்தது?’’

``சாவு வீட்டில் பாடியவன் நான். மக்களின் துயரங்களை நான் நன்றாக அறிவேன். ‘முதல்வன்’ பட அர்ஜூன் மாதிரி, நாமும் கவுன்சிலராகி நம் பகுதி மக்களுக்கு ஏதாவது செய்யணும்னுதான் தேர்தலில் நிற்கக் தொடங்கினேன். மூன்று முறை தோல்வியடைந்து, புது மாணவனாக களத்தில் நிற்கிறேன். கடந்த முறை நிற்கும்போது செலவழிக்க என்னிடம் பணம் இல்லாமல் திண்டாடினேன். இப்போது பணம், புகழ் எல்லாம் இருக்கு. அதனால் வெற்றியும் என்னைத் தேடி வரும்.

‘`ஏதாவது கட்சியில் சேர்ந்து, கட்சி சார்பாக நிற்கலாமே?’’


``அரசியலைத் தொழிலாகச் செய்ய நான் விரும்பவில்லை. நான் இந்த கவுன்சிலர் பதவியைக்கூட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என நினைக்கிறவன். அடுத்தவருக்கு வாய்ப்பு தரவேண்டும். ஐந்து ஆண்டுகள் என்னுடைய திட்டங்களைச் செயல்படுத்த, ஒரு கட்சியில் சேர்ந்து ஒன்பது கட்சிக்கு நான் எதிரியாக இருக்க விரும்பவில்லை. அதனால்தான், தனியா நிக்கிறேன். சினிமாவில்கூட அதிமாகப் பாடாததற்குக் காரணம், அடுத்தவருக்கும் வாய்ப்பு கிடைக்கணும்ங்கிற எண்ணம்தான். என் மக்களுக்கு என் சக்திக்கு முடிஞ்ச அளவு உதவிகள் செய்திருக்கிறேன். அவர்கள் கண்டிப்பா என்னை வெற்றிபெற வைப்பார்கள்.’’

‘`எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிடாமல், கவுன்சிலர் பதவிக்கு நிற்க காரணம்?’’

``முதலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு ஜெயிப்போம். பிறகு எம்.எல்.ஏ பதவிக்கும் கண்டிப்பாகப் போட்டியிடுவேன். கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும்போது, எம்.எல்.ஏ-வுக்கு நிற்பது கஷ்டமா என்ன? செல்போன் அப்படியேதான் இருக்கும், சிம்-கார்டு மாத்துறோம்ல... அதுமாதிரி, இப்போ கவுன்சிலர், அடுத்த இலக்கு எம்.எல்.ஏ! ஆனா, அப்போதும் எந்தக் கட்சி சார்பிலும் நிற்கமாட்டேன்!’’

“முதல்வன் அர்ஜுன்போல ஜெயிப்பேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`தேர்தலில் ஜெயிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?’’

``கடந்த மூன்று ஆண்டுகளில் என் பகுதியில் பல உதவிகள் செய்துள்ளேன். பத்தாவது, பன்னிரெண்டாவது தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுத் தொகை கொடுத்து வருகிறேன். என் பகுதியில் யார் வீட்டில் துக்கம் நடந்தாலும், பத்தாயிரம் கொடுத்துவிடுவேன். இதுதவிர, என் ஏரியாவில் பாஸ்போர்ட் எடுக்கும் இளைஞர்களுக்கு அந்தச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் ஏரியாவில் இலவசப் பயன்பாட்டுக்காக ஒரு ஜெராக்ஸ் மெஷினும், லேமினேஷன் மெஷினும் வைக்க உள்ளேன். எல்லா திட்டங்களும் அறிவுசார் திட்டங்களாக இருக்கணும். என் பகுதி மக்களை முன்னுக்குக் கொண்டுவருவது மட்டும்தான் என்னுடைய நோக்கம். பணக்கஷ்டத்துனால யாராவது படிக்காம இருந்தா, அவங்களுக்குத் தேடிப்போய் உதவி பண்ணுவேன். இதெல்லாம் என் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும்!’’
 
‘`வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?’’

``சென்னையில் இருக்கும் மொத்த வார்டுகளிலே நான்தான் அதிகமான வாக்குகளில் வெற்றிபெறப்போகிறேன். பல பேரை டெபாசிட் இல்லாமல் தோற்கடிப்பேன். இது ரெண்டும் உறுதி. ஒவ்வொரு வீடாக நான் மட்டும் நடந்து சென்று வாக்கு கேட்பேன். நான் வளர்ந்த பகுதி, எல்லோருக்கும் இந்த கானா பாலாவைப் பற்றித் தெரியும். இந்த மூன்று வருடத்தில் இங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஏதாவது ஒரு வகையில் நான் உதவி செய்திருக்கிறேன். எனக்கு ஓட்டு போடாம, வேறு யாருக்கு அவர்கள் ஓட்டு போட்டுவிடப்போகிறார்கள்?’’

- அ.சையது அபுதாஹிர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism