Published:Updated:

இது தஞ்சாவூர் ரவுசு!

இது தஞ்சாவூர் ரவுசு!
பிரீமியம் ஸ்டோரி
இது தஞ்சாவூர் ரவுசு!

இது தஞ்சாவூர் ரவுசு!

இது தஞ்சாவூர் ரவுசு!

இது தஞ்சாவூர் ரவுசு!

Published:Updated:
இது தஞ்சாவூர் ரவுசு!
பிரீமியம் ஸ்டோரி
இது தஞ்சாவூர் ரவுசு!
இது தஞ்சாவூர் ரவுசு!

மிழ்நாட்டுல மொத்தமா இருக்கிற ஸ்கார்ப்பியோ, இன்னோவா, ஃபார்ச்சுனர் கார்களில் மூணுல ஒரு பங்கு, நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியிலதான் இப்ப ஓடிக்கிட்டிருக்கு.

திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற இருப்பது இடைத்தேர்தல். ஆனால், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் பாவம் தேர்தல் கமிஷனரே கன்ஃபியூஸ் ஆகிவிட்டார்.

தஞ்சாவூர்த் தொகுதியில இருக்கிற இரண்டு லட்சத்து சில்லறை வாக்காளர்கள்ல,  ஒவ்வொரு 50 வாக்காளருக்கும் பொறுப்பாளர் ஒருத்தர், அவருக்குத் துணையா ஏரியா நிர்வாகிகள் அப்புறம் தொண்டர்கள்னு ஒரு 25 பேரு. அதாவது, ரெண்டு வாக்காளர்களைக் ‘கவனிக்கிறதுக்கு’ ஒருத்தர்னு அ.தி.மு.க நாலுகால் பாய்ச்சல்ல போகுது. சுருக்கமா சொல்லணும்னா, தஞ்சாவூர்ல இப்போ வாக்காளர்களைவிட, வெளியூர் கட்சிக்காரங்கதான் அதிகம். லாட்ஜ் எல்லாம் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டடிருக்காங்க. இவ்வளவு நிர்வாகிகளுக்கும் காலை, மதியம், இரவு உணவுக்கு முன், இரவு உணவுன்னு தனித்தனியா சுடச்சுட கிடைக்குது. பல உள்ளூர் தொண்டர்கள் அவங்கவங்க வீட்ல சாப்பிட்டே பலநாள் ஆச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தஞ்சாவூர் ரவுசு!

தேர்தல் கமிஷன் வெளியிட்ட மொத்த வாக்காளர் பட்டியலையும், ஐம்பது ஐம்பது பேரா பிரிச்சு, நிர்வாகிகளுக்குத் தனித்தனியா பட்டியல் தந்திருக்காங்க. இந்த ஐம்பது பேரோட வாக்குகளைச் சிந்தாம சிதறாம இரட்டை இலைக்கு வாங்கித்தர்றதுதான் இவங்களோட வேலை. ஒவ்வொரு வாக்காளரோட போன் நம்பரும் இப்ப அ.தி.மு.க கையில இருக்கு. `எந்தத் தேர்தலிலும் இல்லாம, புதுசா ஏண்ணே போன் நம்பரெல்லாம் கேக்கிறீங்க' என்று கேட்டால், போன் பண்ணி `விசாரிக்கிறதுக்காம்!' நிர்வாகிங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அசைன்மென்ட் மூன்று வகைப்படும். 1. எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுறவங்க எத்தனை பேரு? 2. கொஞ்சம் கூடுதலா கவனிச்சா இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுறவங்க எத்தனை பேரு? 3. எவ்வளவு கொடுத்தா இவங்களைச் சரிகட்டலாம்? ஒவ்வொரு 50 வாக்காளரையும் தேர்தல் முடியிறதுக்குள்ள பத்துத் தடவையாவது நேர்ல பார்த்து வணக்கம் வச்சிடணும்னு உத்தரவாம். ஒரு தொகுதிக்கு அதிகபட்ச தேர்தல் செலவா இத்தனை லட்சம்தான் செலவு பண்ணணும்னு ஒரு கணக்கு இருக்கில்லையா, அதை அ.தி.மு.க-வினர் ரொம்ப ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றாங்க. என்ன ஒரே ஒரு வித்தியாசம்னா, தொகுதி தேர்தல் செலவுங்கிறதை, ஒரு நாள் செலவுன்னு மாத்திக்கிட்டாங்க. அவ்வளவுதான்!

சரி, இங்க இவ்வளவு வேகமா வேலை நடக்குதே, அந்தப்பக்கம் எப்புடின்னு எட்டிப்பார்த்தா, தி.மு.ககாரங்க பேயடிச்சுப்போய் இருக்காங்க. இவ்வளவு படைபலத்தை அவங்க எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. `ஜெயலலிதா தேர்தல் களத்துக்கு வராட்டியும் எங்களால ஜெயிக்கமுடியும்’னு நிரூபிக்கிறதுக்காக சசிகலா தரப்பு இவ்வளவு பேரை இறக்கியிருக்காங்கன்னு தி.மு.க-வினர் புலம்பிக்கிட்டு இருக்காங்க. வேற வழியே இல்லாததால், அவங்களும் போன் நம்பர் கேட்டுக்கிட்டு வீடு வீடா ஏறி இறங்கிட்டு இருக்காங்க. டூ லேட் பிரதர்ஸ்.

மத்த கட்சிகளான தே.மு.தி.க மற்றும் பா.ஜ.க-வோட நிலைமைதான் பரிதாபம். “ம்ஹ்க்கும், எங்க எம்.எல்.ஏ-வும்தான் இருக்காரு, என்னத்துக்குப் பிரயோசனம், ஒரு இடைத்தேர்தல் உண்டா’ன்னு சலிச்சுக்கிட்டார் வெளியூர்ல இருக்கிற என்னோட சொந்தக்காரர்.

- குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism