Published:Updated:

திராவகம் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!

திராவகம் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!
திராவகம் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!
திராவகம் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: திராவகம் விற்பனையை கட்டுப்படுத்தவும்,முறைப்படுத்தவும் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், ஏழுமலை என்பவரால் சென்னை ஆதம்பாக்கத்தில் திராவகம் வீச்சுக்குள்ளாகி, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த வித்யாவின் குடும்பத்தினருக்கு ரூ. லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர்  வட்டம், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மகள் வித்யா 30-1-2013  அன்று விஜய் பாஸ்கர் என்பவரால் திராவகத் தாக்குதலுக்கு உள்ளாகி, பலத்த  காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24-2-2013  அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த கொடுஞ்செயலால் அகால மரணமடைந்த வித்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த  இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த வித்யாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் வருகின்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின்போது, திராவக விற்பனையை  கட்டுப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்படும்" என்று கூறியுள்ளார்.

சமீப நாட்களாக பெண்கள் மீது திராவகம் வீசும் சம்பவம் அதிகரித்ததன் எதிரொலியாக திராவக விற்பனைக்கு கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.