Published:Updated:

எதிர்க்கட்சிகள் திரளாகப் பங்கேற்பு - கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் குமாரசாமி!

எதிர்க்கட்சிகள் திரளாகப் பங்கேற்பு - கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் குமாரசாமி!
News
எதிர்க்கட்சிகள் திரளாகப் பங்கேற்பு - கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் குமாரசாமி!

எதிர்க்கட்சிகள் திரளாகப் பங்கேற்பு - கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் குமாரசாமி!

கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாகப்  பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். இதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, இன்று கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெங்களூரு விதானா சவுதானாவில் நடந்த விழாவில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி, சீதாராம் யெச்சூரி, சரத்பவார் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். குமாரசாமியுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவை முன்னிட்டு பெங்களூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.