Published:Updated:

ஜெயலலிதாவுடன் மேலும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ. சந்திப்பு!

ஜெயலலிதாவுடன் மேலும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ. சந்திப்பு!
ஜெயலலிதாவுடன் மேலும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ. சந்திப்பு!
ஜெயலலிதாவுடன் மேலும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ. சந்திப்பு!

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏ. டி.சுரேஷ்குமார் இன்று  சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"முதலமைச்சர்  ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் தேமுதிக-வைச் சேர்ந்த செங்கம்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.சுரேஷ் குமார் நேரில் சந்தித்தார்.

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும், கர்நாடகத்தின் பிடிவாதப்  போக்கினையும் மீறி சட்டப் போராட்டத்தின் மூலம் காவேரி நடுவர் மன்ற இறுதி  ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்தின் உரிமையை  நிலைநாட்டி, மகத்தான சாதனை புரிந்தமைக்கு தனது சார்பாகவும், தன் தொகுதி மக்கள்  சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்" என்று கூறப்பட்டுள்ளது.

##~~##
ஏற்கனவே தேமுதிக கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சுந்தர்ராஜன் (மதுரை மத்தி),  மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), நடிகர் அருண்பாண்டியன் (பேராவூரணி), தமிழழகன்  (திட்டக்குடி) ஆகிய 4 பேரும் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி பிரச்னை குறித்து மனு  கொடுத்தனர்.
இந்த சந்திப்பால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபையில் இந்த  4 எம்.எல்.ஏ.க்களும் ஒரே இடத்தில் வரிசையாக அமர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இன்று தேமுதிக-வை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. முதலமைச்சர்  ஜெயலலிதாவை சந்தித்திருப்பது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.