Published:Updated:

தேபேந்திரநாத் சாரங்கி திடீர் விடுவிப்பு

தேபேந்திரநாத் சாரங்கி திடீர் விடுவிப்பு
தேபேந்திரநாத் சாரங்கி திடீர் விடுவிப்பு
தேபேந்திரநாத் சாரங்கி திடீர் விடுவிப்பு

சென்னை: தமிழக அரசின் ஆலோசகராக இருந்த தேபேந்திரநாத் சாரங்கி திடீரென பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த தேபேந்திரநாத் சாரங்கி, கடந்த டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து அவர், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். உடனே பொறுப்பேற்ற அவர், கடந்த இரண்டு மாதமாக அந்த பணியை செய்து வந்தார்.

இந்தநிலையில், அந்த பதவியில் இருந்து நேற்றிரவு விடுவிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. அவர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை.