Published:Updated:

எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்

எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்
பிரீமியம் ஸ்டோரி
எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்

எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்

எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்

எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்

Published:Updated:
எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்
பிரீமியம் ஸ்டோரி
எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்
எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்

றுப்புக் கண்ணாடி, வெள்ளைத் தொப்பி, முழுக்கை சட்டை - வேட்டி... இது எம்.ஜி.ஆரின் அரசியல் அடையாளம். கொல்வதற்கு வரும் எப்பேர்ப்பட்ட வில்லனையும் ஓர் அலட்சியப் புன்முறுவலுடன் எதிர்கொள்வது அவருடைய சினிமா அடையாளம். இதைத் தாண்டி இவருடைய அரசியல், சினிமா அடையாளங்களைக் கண்டெடுப்பது அவசியம்... சுவாரஸ்யம்!

சினிமா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் அவர் உச்சம் தொட்டார். இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அதில், இரண்டுக்குமான பொதுச்சரடு ஒன்றை உணர முடிகிறது.  ‘தனக்கு எதிரிகளே இல்லாமல் பார்த்துக்கொள்வார்’ என்று பொதுப்புத்தியில் எம்.ஜி.ஆரைப் பற்றிய ஒரு சித்திரம் உண்டு. அதற்கு மாறான இன்னொரு அம்சமும் அவரிடம் இருந்தது.

எதிரிகளை அரவணைத்துக்கொள்ளும் ஓர் உத்தி அது. உத்தியா அல்லது பண்பா என்கிற கேள்வி வந்தால், பண்பு என்று ஒப்புக்கொள்வதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எம்.ஜி.ஆரைப் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தவர்கள் எனப் பட்டியல் இட்டால், அதில் கருணாநிதி, கண்ணதாசன், ஜெயகாந்தன், தமிழ்வாணன் ஆகியோரை முக்கியமான ஆளுமைகளாகச் சொல்லலாம். கிண்டல் செய்து எழுதுவதை எழுத்தாளர் சாவி போன்றவர்கள் செய்தனர். எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கின் முன்னால், பலர் தொடர்ந்து அவரை விமர்சிக்க முடிந்ததை அவரிடமிருந்த ஜனநாயகப் பண்பின் அடையாளம்என்றுதான் சொல்ல வேண்டும். ஒருமுறைகூட அதற்கு அவர் எதிர்வினை ஆற்றியதே இல்லை. அவற்றை எல்லாம் கவனிக்கத் தவறியவர்போல இருந்தார். அப்படி எதிர்த்த சிலரை பின்னாளில் தனக்கு அருகில்கூட வைத்துக்கொண்டார். தன்னைச் சுட்ட எம்.ஆர்.ராதாவைக்கூட ஒருபோதும் வெறுத்துப் பேசியது இல்லை. ‘அரங்கமும் அந்தரங்கமும்’ எனும் தொடராக எம்.ஜி.ஆரின் இன்னொரு பக்கங்களை கண்ணதாசன் எழுதினார். ‘அரிதார மேடையில் இருந்து அரசியல் மேடைக்கு வந்தவர்’ என்று விமர்சித்தார். ஆனால், அரசியல் மேடையில் உச்சம் தொட்டு அரியணை ஏறியதும், தன்னை விமர்சித்த கண்ணதாசனை அரசவைக் கவிஞர் ஆக்கினார் எம்.ஜி.ஆர்.

எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்

ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் ‘நான் ஏன் பிறந்தேன்?’ எழுதிக்கொண்டிருந்த போதுதான், எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்குமான உரசல் ஆரம்பித்தது. அப்போது கருணாநிதியை விமர்சித்து ஆனந்த விகடனின் தலையங்கம் ஒன்று வந்தது. ஓர் அரசியல் தலைவரை இப்படி விமர்சிக்கலாமா என நீண்ட அத்தியாயம் எழுதினார் எம்.ஜி.ஆர். அடுத்த இதழ் வருவதற்குள் விவகாரம் முற்றி, தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர் விலகினார். கருணாநிதியை விமர்சிக்கக் கூடாது என கட்டுரை எழுதி, அது வெளிவந்த நாளிலேயே அவரிடம் இருந்து பிரிகிற அந்தக் குறுகிய காலகட்டத்தின் ‘நிகழ்வுகள்’ ஆராய்ச்சிக்குரியன. ஒன்று, அவர் எதிரியைப் பகைத்துக்கொள்வதில் எப்போதும்போல விருப்பம் காட்டவில்லை. கடைசி நிமிடம் வரை, தான் அனுசரித்துப்போனதை ஒருவகையில் அவர் பதிவுசெய்தார் என்றே தோன்றுகிறது. பிரிந்த பின்னும்கூட ‘நண்பர் கலைஞர் அவர்கள்’ என்றேதான் இறுதிவரை பேசிவந்தார்.

எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்


எம்.ஜி.ஆர் நடிக்க வந்த காலகட்டத்தை எடுத்துக்கொள்வோம். அவர் நீறு பூசிய நெற்றியுடன், கதர் ஆடையுடன் காங்கிரஸ் பிரமுகராக இருந்தார். திராவிட இயக்கம் எழுச்சி பெற ஆரம்பித்த காலகட்டம். மலையாளத்தைத் தாய் மொழியாகக்கொண்ட ஒரு நடிகர், தமிழ் என் மூச்சு எனக் களம் இறங்கி, உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார்.  கருணாநிதிதான் அவரைத் தி.மு.க-வுக்கு அழைத்துவந்தார் என்றாலும், எம்.ஜி.ஆர் மிகக் கவனமாக  அதில் அடி எடுத்துவைத்தார். ‘திராவிடம்’ அதற்கு இடம் கொடுத்தது. இயக்கம் வளர்ந்தது; அவரும் வளர்ந்தார். அவருடைய புகழ், இயக்க வளர்ச்சிக்கும், உதவியது. தி.மு.க-வில் இருந்து விலகியபோது, அவர் மீது, ‘மலையாளி’ முத்திரை குத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டது. சற்று பின்னோக்கி யோசிப்போம். அவர் ஒரு தேசியக் கட்சியின் அபிமானி என்ற அடையாளத்தோடே நடித்துவந்திருந்தார் என்றால், மலையாளி எனப் புறந்தள்ள அவர்களுக்கு எளிமையாக இருந்திருக்கும். அந்த வாய்ப்பை அவர்களுக்கு எம்.ஜி.ஆர் வழங்கவில்லை. எதிரிகளின் நண்பராக இருப்பது அவருடைய பாணி... அவருடைய உத்தி... அவருடைய பெருந்தன்மை... அவருடைய பண்பு என எல்லா அம்சங்களையும் கொண்டதாக இருக்கிறது.

சினிமாவில் அவருக்கென்று ஒரு முத்திரை இருந்தது. சொல்லப்போனால், அவருடைய பெரும்பாலான படங்கள் ஒரே கதையைத்தான் சொல்லின. அநீதியை எதிர்ப்பது. அவருடைய அநீதி எதிர்ப்பு எளிமையானதாக இருந்தது அல்லது அவர் எல்லா அநீதிகளையும் எளிமைப்படுத்தினார். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் உலகம் போற்றும் ஒரு விஞ்ஞானியின் பெயர், முருகன். உலகை அழிக்கும் ஒரு கண்டுபிடிப்பை அவர் பயன்படுத்தாமல் தவிர்க்கிறார். ‘‘அந்த ஃபார்முலாவைச் சொல்ல்...லிடு’’ என படம் முழுக்க அசோகன் அலைகிறார். ஒரு கண்டுபிடிப்பை ஒரு வரியில் சொல்லக்கூடிய ஃபார்முலா என்கிறார். மக்களுக்கு அது போதும் என்பது அவருடைய எண்ணம். ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் பாகிஸ்தானுக்குப் போய் ரகசியங்களை மீட்டு வருகிறார். அங்கே ‘பாகிஸ்தான் எல்லை முடிவு’ என தமிழில் போர்டு ழுதப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் தமிழில் போர்டு வைப்பார்களா எனப் பத்திரிகைகள் கேட்கும் என அவருக்குத் தெரியும். கிண்டல் அடிப்பார்கள் எனத் தெரிந்தே அதைச் செய்தார். அந்த போர்டையும் படிக்க முடியாத மக்கள் அவர் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அதனால்தான் ‘‘பாகிஸ்தான் எல்லையைத் தாண்டிவிட்டேன்’’ என போலீஸ் அதிகாரிக்குத் தகவல் சொல்கிறார்.

எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்

டாக்டர், வக்கீல் இன்ஸ்பெக்டர், விவசாயி, ரிக்‌ஷாகாரர், மீனவர், மில் தொழிலாளி என எல்லா படத்திலும் ஏதோ ஒரு தொழிலைச் செய்தாலும், அநீதியை எதிர்க்கும் தொழில்தான் அவருக்கு அடையாளம். சுமார் 136 படங்கள் அவர் நடித்தார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’ என்பார். ‘கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி’ என்பார். சுருக்கமாகச் சொன்னால், எல்லாப் படங்களிலுமே தன்னை ‘லட்சிய வீரன்’ ஆக வரித்துக்கொண்டார்.

அதே நேரத்தில், சினிமாவில் புதிய புதிய உத்திகளைச் செய்து பார்த்தவர் எம்.ஜி.ஆர். இயக்குநர் மகேந்திரன், கே.பாலசந்தர், வி.சி.குகநாதன் போன்ற புதிய படைப்பாளிகளைத் தன் படங்களுக்குப் பயன்படுத்தியவர். இசையமைப்பு, எடிட்டிங், சண்டைப் பயிற்சி, நடனம், ஆடை அலங்காரம் எல்லாவற்றிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது.

எதிரிகளின் நண்பர் எம்.ஜி.ஆர்! - தமிழ்மகன்


எம்.ஜி.ஆரின் அத்தனைப் பாடல்களும் துள்ளலாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தன. அவருடைய திரை வாழ்வை, அரசியல் வாழ்வை அவரே அங்குலம் அங்குலமாக செதுக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் நைஸாக நழுவுவார். எம்.ஜி.ஆர் செய்கிற செயலா அது? அடுத்து சில நிமிடங்களில் இன்னொரு எம்.ஜி.ஆர் வந்து அதற்குப் பணம் செலுத்திவிடுவார். அப்படித்தான் எம்.ஜி.ஆர். சர்வ ஜாக்கிரதையாக தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைத்தார். டி.வி புழக்கத்துக்கு வந்ததுமே, வெளிநாட்டு சேனல்களைப் பார்க்க வீட்டில் ஆன்டெனா அமைத்தவர் அவர்தான். பல நாட்டு இசைத் தட்டுகளையும் வாங்கிவந்து எம்.எஸ்.வி-யிடம் கொடுத்திருக்கிறார். சேகுவாரா போல கெட்டப் போட்டு நடிப்பார் (தனிப்பிறவி). பஞ்சாபிகள் போல ஆடுவார் (குடியிருந்த கோயில்). கிரிக்கெட் அறிமுகம் ஆகாத நாளிலேயே டெஸ்ட் மேட்ச் தெரியுமா? (அன்பே  வா) என ஆடிக் காட்டினார். 1966-ல் எத்தனை பேருக்கு டெஸ்ட் மேட்ச் தெரியும்?

தி.மு.க-வை உடைத்துவிட்டால், திராவிட இயக்கம் அழிந்துவிடும் என்பது கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் பெரும் கனவாக இருந்தது. எம்.ஜி.ஆர் அறிந்தோ, அறியாமலோ திராவிட இயக்கத்தைக் காப்பாற்றினார் என்றுதான் சொல்ல வேண்டும். தி.மு.க அல்லது காங்கிரஸ் என்ற இரண்டு வாய்ப்புகள்தான் அன்றைய மக்கள் மனத்தில் இருந்தது. அதை, தி.மு.க அல்லது அ.தி.மு.க என மாற்றியது எம்.ஜி.ஆரின் அரசியல் விளைவே.

எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை, ஆளுமையை இந்த அத்தனை முரண்பாடுகளுடன்தான் அணுக வேண்டியிருக்கிறது.