Published:Updated:

தொலைபேசி ஒட்டு கேட்கவில்லை: ஷிண்டே விளக்கம்

தொலைபேசி ஒட்டு கேட்கவில்லை: ஷிண்டே விளக்கம்
தொலைபேசி ஒட்டு கேட்கவில்லை: ஷிண்டே விளக்கம்
தொலைபேசி ஒட்டு கேட்கவில்லை: ஷிண்டே விளக்கம்

புதுடெல்லி: தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை என்றும், தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் குறித்த தகவல்கள் மட்டும் சிலர் திரட்டியதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் விளக்கத்தை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.

பாரதிய ஜனதா மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் ஷிண்டே விளக்கம் அளித்தார்.

அப்போது, தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக புகார் அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும், மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் நிதின் கட்கரி, விஜய் கோயல் உள்ளிட்ட 60 பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார் எழுந்தது. ஆனால், இதனை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மறுத்தார்.

தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை என்றும், தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் குறித்த தகவல்கள் மட்டும் சிலர் திரட்டியதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.