Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்
பெட்ரோல் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்
பெட்ரோல் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்

சென்னை: பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா உள்பட அரசியல் கட்சித்  தலைவர்கள், பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா: பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குள்ளாகவே மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தியிருப்பது வேதனைக்குரியது. இதனால் வாகனக் கட்டணங்கள் உயர்வதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி ராஜா: சாதாரண மக்களின் வலியையும், வேதனையையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். பெட்ரோல் விலை உயர்வு குறித்த பிரச்சனையை திங்களன்று நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். விலை உயர்வுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவதை கைவிட்டு இப்பிரச்சனையில் உரிய தீர்வைக்காண மத்திய அரசு முன் வர வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: 15 நாட்களில் 2 முறை பெட்ரோல் விலையை உயர்த்தினால் பொருட்கள் விலை உயரும். இதனால் பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்-. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: சாமான்ய மக்களுக்கு பயன் தரும் விசயங்கள் மத்திய நிதி நிலை அறிக்கையில் எதுவும் இல்லாத நிலையில், தற்போது பெட்ரோல் விலையை உயர்த்தியதன் மூலம் மத்திய அரசு பெரும் பொருளாதார குற்றத்தை செய்துள்ளது. விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறாவிட்டால் மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பதிலை வழங்குவார்கள்.

பெட்ரோல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனே விலை உயர்வை திரும்ப பெறுவதோடு, பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயத்தை மத்திய அரசு திரும்ப தன் வசமே கொண்டு வர வேண்டும்.