Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

என்.சண்முகம், திருவண்ணாமலை.

? ‘மோடியின் நடவடிக்கைகளால் ராகுல் பிரதமர் ஆவார்’ என்கிறாரே திருமாவளவன்?


! இப்படி வேறு யாராலோ ராகுல் பிரதமர் ஆனால்தான் உண்டு; அவராக ஆக முடியாது என்கிறாரா திருமா?

கழுகார் பதில்கள்!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

? ‘பிரதமர் நரேந்திர மோடி புலி மீது சவாரி செய்கிறார்’ என்று பீகார் முதல்வர் பாராட்டி உள்ளாரே?


! பி.ஜே.பி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டது பிடிக்காமல், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியவர் நிதிஷ்குமார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி நீங்கலான கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லப்படுபவர் நிதிஷ்குமார். அப்படிப்பட்டவர் மோடியின் ரூபாய் நோட்டு முடிவுகளை வெளிப்படையாக ஆதரித்து வருகிறார். திண்ணை எப்போது காலியாகும் என்றும் புலி மீது சவாரி செய்யும் மோடி கீழே விழுந்தால் நல்லது என்றும் நிதிஷ் நினைக்கலாம் அல்லவா?

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

? ‘கறுப்புப் பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி கொண்டு வந்த இந்தத் திட்டம் ஏழைகளை பணக்காரர்கள் ஆக்கும்’ என்று தமிழிசை செளந்தர்ராஜன் கூறுவது வேடிக்கையாக உள்ளதே?


! ‘வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வோர் இந்தியரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன்’ என்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த வாக்குறுதியை நரேந்திர மோடி நிறைவேற்றினால், தமிழிசை செளந்தர்ராஜன் சொன்னது நிறைவேறலாம்?!

ச.பால்துரை, தங்கம்மாள்புரம்.


? ஏழைகளின் பணத்துயரம் அதிகமாகிக் கொண்டே போவது பற்றி?


! 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் தாராளமாகக் கிடைக்கும் வரை இந்தத் துயரம் அதிகம் ஆகத்தான் செய்யும். வங்கிகளில் இருந்து நினைத்தது மாதிரி பணத்தை எடுக்க முடியவில்லை. எடுக்கும் பணமும் 2,000 ரூபாய் நோட்டாக இருப்பதால், அதை மாற்ற முடிய வில்லை. 500 ரூபாய் நோட்டு இன்னும் சரளமாகப் புழக்கத்துக்கு வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில், பணத்துயரம் அதிகமாகத்தான் செய்யும். இயல்பு நிலைமைக்குத் திரும்ப ஆறு மாதங்கள் ஆகலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

ஆர்.அஜிதா, கம்பம்.

? தஞ்சாவூர்,   அரவக்குறிச்சி,    திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தை பி.ஜே.பி. பிடித்துள்ளதே?


! தே.மு.தி.க-வை பி.ஜே.பி முந்தி உள்ளது பெரிய விஷயம். அதற்காக மூன்றாவது இடம் என்று சொல்வது பெருமைக்குரியது அல்ல. ஏனென்றால், வாங்கிய வாக்குகள் பி.ஜே.பி-க்கு மரியாதைக்குரியதாக இல்லை. அரவக்குறிச்சியில் 3,162, தஞ்சாவூரில் 3,806, திருப்பரங்குன்றத்தில் 6,930 என்ற எண்ணிக்கையில்தான் பி.ஜே.பி வாக்குகளை வாங்கி உள்ளது. மத்தியில் அதிகாரம் பொருந்திய கட்சியாக ஆட்சி நடத்தும் பி.ஜே.பி-யால் இவ்வளவுதான் ஒரு சட்டமன்றத் தொகுதியில் திரட்ட முடிகிறது என்றால், அது அந்தக் கட்சிக்கு மரியாதைக்குரியது அல்ல.

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

? ‘மத்திய நிதி அமைச்சகம் சற்று விழிப்புடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு சிக்கல்கள் வந்திருக்காது’ என்று சொல்லி இருக்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி?


! அருண் ஜெட்லிக்கும் இந்த நடவடிக்கைக்கும் முழுத் தொடர்பு இருக்கிறதா, இல்லையா எனத் தெரியவில்லை. எனவே, சுவாமி தனது கருத்தை ட்விட்டரில் சொல்வதற்குப் பதிலாக மோடியிடம் சொல்லி இருக்கலாம்.

எம்.சி.சுப்பையா, திருத்தங்கல்.

? ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்’ என்று கூறும் முதலமைச்சர் ஜெயலலிதா, செல்லாத நோட்டுகளை மாற்ற மக்கள் படும் அவஸ்தைகளைக் கண்டு ஆளும் மத்திய அரசை எதிர்க்காதது ஏன்?


! டெல்லியில் எதிர்க் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க சார்பில் நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு இருந்ததை நீங்கள் கவனிக்கவில்லையா? 

கழுகார் பதில்கள்!

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

? ‘நாட்டில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பும் அரவணைப்பும் கொடுக்கக் கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான்’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சொல்லி இருக்கிறாரே?


! 2008-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி பற்றி திருமாவளவன் சொன்னது எல்லாம் தொகுத்துப் பார்த்தால் கிறுகிறுத்துவிடும்.

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

? அமைச்சரவையைக் கலந்து ஆலோசிக்காமல், ‘ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று தன்னிச்சையாக பிரதமர் அறிவித்தது தேசத்தைக் கண்கலங்க வைத்துவிட்டதே?


! அமைச்சரவையில், கலந்தாலோசனை செய்யப்பட்டது. அவர்கள் என்ன சொன்னார்கள், எதிர்ப்பு தெரிவித்தார்களா, அவர்களது ஆலோசனை மதிக்கப்பட்டதா என்பது அரசாங்க ரகசியம். எனவே, கலந்தாலோசனை செய்யவில்லை என்று சொல்ல முடியாது.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.


? மூன்று தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவது என்ன?


! வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பதைப் போல பணம் உள்ள கட்சி தழைக்கும். இந்த இடைத்தேர்தல் மட்டுமல்ல... எல்லா தேர்தல்களும் இதனைத்தான் உணர்த்தி வருகின்றன.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism