Published:Updated:

சோனியா குடும்பத்திற்காக தேசத்தை பலியாக்கும் காங்கிரஸ் கட்சி- மோடி

சோனியா குடும்பத்திற்காக தேசத்தை பலியாக்கும் காங்கிரஸ் கட்சி- மோடி
சோனியா குடும்பத்திற்காக தேசத்தை பலியாக்கும் காங்கிரஸ் கட்சி- மோடி
சோனியா குடும்பத்திற்காக தேசத்தை பலியாக்கும் காங்கிரஸ் கட்சி- மோடி

புதுடெல்லி: ஒரு குடும்பத்திற்காக தேசத்தையே பலியாக்குகிறது காங்கிரஸ் கட்சி என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்து வரும் பா.ஜ.க. தேசிய குழு கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு அவர் கூறினார்.

சோனியா காந்தி குடும்பத்திற்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பாடுபட்டு வருவதாகவும் மோடி புகார் கூறினார்.

இந்தியாவின் நன்மதிப்பை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாழாக்கி விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

30 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை என குறை கூறிய மோடி, மக்களிடம் இருந்து மத்திய அரசு விலகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்மோகன் சிங்கிற்கு பதிலாக பிரணாப் முகர்ஜியை பிரதமர் ஆக்கியிருக்கலாம் என்று கூறிய மோடி, வாரிசு அரசியல் பறிபோய்விடும் என்பதால் பிரணாப்பை காங்கிரஸ் கட்சி பிரதமராக்கவில்லை என்றார்.

குஜராத் மாநில அரசு பற்றி செய்திகள் கிரிக்கெட் விமர்சனம் போன்றது என்று தெரிவித்த மோடி, என்னை கவுரவித்த பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி தெரிவித்தார்.