Published:Updated:

நடுக்கடலில் தத்தளித்த அமைச்சர் சம்பத்

நடுக்கடலில் தத்தளித்த அமைச்சர் சம்பத்
நடுக்கடலில் தத்தளித்த அமைச்சர் சம்பத்
நடுக்கடலில் தத்தளித்த அமைச்சர் சம்பத்

கடலூர்: கடலூர் அருகே தேவனாம்பட்டினத்தில் அமைச்சர் சம்பத் சென்ற படகு இயந்திர கோளாறால் நடுக்கடலில் தத்தளித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் படகுப் போட்டி இன்று நடத்தப்பட்டது.

இந்த படகுப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் சம்பத் படகு ஒன்றில் நடக்கடலுக்கு சென்றார். அப்போது அவர் சென்ற படகில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, நடுக்கடலில் தத்தளித்த அமைச்சர் சம்பத் படகை மீனவர்கள் கயிறு கட்டி இழுத்து கரை சேர்த்தனர்.

இதனிடையே படகுப் போட்டியின் இரு படகுகள் திடீரென மோதிக் கொண்டதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.