Published:Updated:

“தாத்தா வந்துட்டேன் !”

“தாத்தா வந்துட்டேன் !”
பிரீமியம் ஸ்டோரி
“தாத்தா வந்துட்டேன் !”

“தாத்தா வந்துட்டேன் !”

“தாத்தா வந்துட்டேன் !”

“தாத்தா வந்துட்டேன் !”

Published:Updated:
“தாத்தா வந்துட்டேன் !”
பிரீமியம் ஸ்டோரி
“தாத்தா வந்துட்டேன் !”
“தாத்தா வந்துட்டேன் !”

பாண்டிச்சேரியில் அடித்துத் தூக்கியெறியப்பட்டபோது அணைத்து மருந்திட்ட பெரியார், அன்று அருகில் இல்லை...

பாளையங்கோட்டை சிறைக்கு வந்து பார்த்துவிட்டு, `இனி இது கழகத்தவர் யாத்திரை செல்லத்தக்க திருத்தலம்’ என்று உற்சாகத்தோடு சொன்ன அண்ணாவும் அன்று பக்கத்தில் இல்லை...

“தாத்தா வந்துட்டேன் !”

பதிலாக, கலைஞரை முத்தங்களாலேயே குளிப்பாட்டி ஐந்து நாட்கள் காயத்துக்கு மருந்திட்டவர்கள் அவரின் கொள்ளுப்பேரன் - பேத்திகள்!

கலைஞர் - முதல்வராகப் பதவியேற்றபோதுகூட கோபாலபுரம் வீடு இவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்காது... தாத்தாவை ஐந்து நாட்களாகக் காணாமல், டி.வி-யில் புரியாமல் பார்த்த காட்சிகளை நினைத்தே சோக முகத்தோடு சுட்டிகள் காத்து நிற்க... புதனன்று மாலையில் சுமோவில் வந்திறங்கினார், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கலைஞர்.

“தாத்தா வந்துட்டேன் !”

``வாங்கடா, வாங்கடா’’ என்று குரல்கொடுக்க, சந்தோஷக் கூச்சலுடன் பட்டாம்பூச்சிகள் போலத் தாத்தாவைச் சுற்றிக்கொண்டார்கள் சுட்டிகள். என்ன பேசுவதென்று அறியாத அந்தப் பிஞ்சுகள், கலைஞரின் வயிற்றைக் கட்டிக்கொண்டு கூத்தாட... ``ம்... ம்... தாத்தாதான் வந்துட்டேன்லப்பா...’’ என்றபடியே உள்ளே ஊர்ந்தார்.

அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி படங்கள் இருக்கும் சிறிய ஷெல்ஃப் முன்னால் போய் நின்ற கலைஞர், இரு கைகளாலும் படங்களைத் தொட்டு வணங்கிவிட்டு பக்கத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்தார். சுட்டிகள், தாத்தாவுக்குப் பக்கத்தில் இடம்பிடிக்க ஓடினார்கள். முட்டிமோதி ஆளுக்கொரு முத்தம் தர... பரவசத்தில் கலைஞர் முகம் பிரகாசமாகிவிட்டது. ``தாத்தாவுக்கு என்னமோ ஆகிடுச்சுனு பயந்துட்டீங்களாடா?’’ என்று கலைஞர் கேட்க, குழந்தைகளுக்குச் சிரிப்பு. ``எங்கே தாத்தா அடிச்சாங்க... வலிக்குதா?’’ என்று மழலை விசாரிப்புகளின் மகிழ்ச்சிக் கூட்டத்தில் தானும் ஒரு குழந்தையானார்! சிரிப்பில் நிமிர்ந்தால்... எதிரில் மு.க.அழகிரி!

“தாத்தா வந்துட்டேன் !”

ஏறத்தாழ பத்து மாத ஊடலுக்குப் பிறகு கோபாலபுரம் வந்திருக்கிறார் அழகிரி. கலைஞரின் கைது, தந்தை-மகன் பகை மறக்கவும் ஒரு காரணமானது. ``உன் கண் செவந்து வீங்கியிருக்கு. கண்ணாடியில போய்ப் பாரு...’’ என்று கலைஞர், அழகிரியிடம் கரிசனமாகச் சொல்வதை பாசத்தோடு

“தாத்தா வந்துட்டேன் !”

பார்த்துக்கொண்டிருந்தார் தயாளு அம்மாள்.

அதற்குள் கலைஞர் கண்ணில் கலாநிதி மாறன் பட... ``புகழ், இங்கே வாடா... எவ்ளோ பெரிய வேலை பண்ணியிருக்கே...

நீ இல்லைன்னா உண்மை உலகத்துக்குத் தெரியாமலே போயிருக்கும்...’’ என்று கலைஞர் பாராட்ட, கூச்சப்பட்டு நெளிந்தார் கலாநிதி!

“தாத்தா வந்துட்டேன் !”

இந்தச் சந்தோஷக் களேபரத்தில் கலைஞர் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டி `கண்ணா’வை யாரும் கண்டுகொள்ளவில்லை. அது தனது வருத்தத்தை `வள்... வள்...’ என்று குரைத்து வெளிக்காட்டியதும் ``ஐயோ... கண்ணாவை மறந்துட்டேனே!’’ என்றபடியே அதை எடுத்து அள்ளிக் கொஞ்சினார் கலைஞர். ``நாலு நாளா அது சரியா சாப்பிடல...’’ என்றதும், ``அப்படியாடா! வாடா, வாடா... நான்தான் வந்துட்டேனேடா...’’ என்று அதன் கழுத்தை வருடி உருகினார் கலைஞர்.

இந்த நேரத்தில் ``ஐயா...’’ என்றபடியே கலைஞரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார் டிரைவர் சஞ்சீவி. ``அன்னிக்கு நான் பக்கத்துல இருந்தும் உங்க மேல அடி விழாமக் காப்பாத்த முடியலையே ஐயா!’’ என்று அவர் கதறியதும் கலைஞரின் கண்கள் கலங்கின. ``நீங்க கைதாகிப் போனதுல இருந்து, `என்னால ஐயாவைக் கவனிக்க முடியலையே... அவருமேல அடி விழாம தடுக்க முடியலையே’னு சொல்லி அழுதுகிட்டே இருக்கார் சஞ்சீவி...’’ என்று பக்கத்திலிருந்த தயாளு அம்மாளும் எடுத்துக்கொடுக்க, சஞ்சீவியைத் தோளில் தட்டி சமாதானப்படுத்தினார் கலைஞர்.

அதற்குள் சூடான காபி வர... அதை வாங்கி கலைஞரிடம் கொடுத்த தயாளு அம்மாள், ``நாங்களெல்லாம் மறுபடி சிரிப்போம்னு நினைக்கல...’’ என்று சொல்ல, சுற்றியிருந்தவர்கள் முகத்தில் லேசாக சோகரேகை. அந்த நேரத்தில் உள்ளே வந்தார் நடிகர் விஜயகாந்த்.

“தாத்தா வந்துட்டேன் !”

``உங்க உடம்புக்கு ஒண்ணும் ஆகலையே... கால் வீங்கியிருக்குனு சொன்னாங்களே..?’’ என்று விசாரித்த விஜயகாந்த, திடீரென உணர்ச்சிவசப்பட்டவராக ``என்னய்யா அநியாயம் இது?’’ என்று நா தழுதழுத்தார். கலைஞரும் உணர்ச்சிவசப்பட்டு விஜயகாந்தின் கையைப் பிடித்துக்கொண்டார். ``அப்பா... அப்பா...’’ என்றபடியே ஓடிவந்த ராதிகாவும் கலைஞரின் கையைப் பிடித்தபடியே உருகினார். அன்பு விசாரிப்புகள் மெள்ள முடியவும் ``அறிவாலயம் போகணும்... பத்திரிகைகாரங்க காத்திருப்பாங்க...’’ என்ற கலைஞர், ``வெந்நீர் போட்டு வெச்சிருக்கா?’’ என்று கேட்க... ``மேலே ரெடியா இருக்கு...’’ என்றார் தயாளு அம்மாள்.

சமீபத்தில்தான் கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் லிஃப்ட் போடப்பட்டது. ``நீங்க படியில் ஏறவேண்டாம். லிஃப்ட்ல போங்க. லிஃப்ட் மேலே லாக் பண்ணியிருக்கு. நான் போயி, கீழே கொண்டுவர்றேன்...’’ என்றபடியே தயாளு அம்மாள் படியில் ஓடி ஏறினார். அந்த உற்சாகத்தில் தயாளு அம்மாளுக்குப் பத்து வயது குறைந்திருக்கும்.

- ப.திருமாவேலன்
(15-7-2001 இதழில் இருந்து...)