Published:Updated:

உண்ணாவிரதத்தை இன்று முடித்தார் சசிபெருமாள்

உண்ணாவிரதத்தை இன்று முடித்தார் சசிபெருமாள்
உண்ணாவிரதத்தை இன்று முடித்தார் சசிபெருமாள்
உண்ணாவிரதத்தை இன்று முடித்தார் சசிபெருமாள்

சென்னை: 33 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த காந்தியவாதி சசிபெருமாள் இன்று மாலை தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூரில் உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவரை சந்தித்த தலைவர்கள் பலரும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், நேற்றிரவு காவல்துறையினர், சசிபெருமாளை வலுக்கட்டாயமாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்ககு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த  சசிபெருமாள், இன்று மாலை தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டார்.