Published:Updated:

ராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்க கோரி ரயில் மறியல்

ராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்க கோரி ரயில் மறியல்
ராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்க கோரி ரயில் மறியல்
ராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்க கோரி ரயில் மறியல்

திருச்சி: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையில் தனிஈழம் அமைப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் ரயில் மறியல் செய்த ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரி திண்டிவனத்தில் புதுவை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த மறியலால் சென்னை-புதுவை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக சென்றது.

##~~##
இதே போல் திருச்சி ரயில் நிலையம் முன்பு ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் ரயில் நிலையத்துக்குள் புகுந்த அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை திருத்தமின்றி நிறைவேற்ற வேண்டும், இலங்கையில் தனிஈழம் அமைப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்தப்பட்டது.