Published:Updated:

பொட்டு சுரேஷ் கொலை: தளபதி உள்ளிட்டவர்களிடம் விசாரணை!

பொட்டு சுரேஷ் கொலை: தளபதி உள்ளிட்டவர்களிடம் விசாரணை!
பொட்டு சுரேஷ் கொலை: தளபதி உள்ளிட்டவர்களிடம் விசாரணை!
பொட்டு சுரேஷ் கொலை: தளபதி உள்ளிட்டவர்களிடம் விசாரணை!

மதுரை: பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக மதுரை மாநகர மாவட்ட திமுக  செயலாளர் தளபதி உள்ளிட்ட5  பேர்களிடம் சுப்ரமணியபுரம் காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் இன்று விசாரணை நடத்தினார்.

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலது கையாக திகழ்ந்தவரும், திமுக  பொதுக்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ் சில வாரங்களுக்கு முன்னர் வெட்டிக்  கொல்லப்பட்டார்.

##~~##
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ள  நிலையில், மதுரை மாநகர மாவட்ட திமுக செயலாளர் தளபதி, போடி திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், தளபதிக்கு மிக நெருக்கமானவருமான. லட்சுமணன், மதுரை திமுகவின் 4  ஆம் பகுதி செயலாளர் ஜெயராம், முக்கிய காண்ட்ராக்டரான சோலை ராஜா, ரஜினி மன்றத்தை சேர்ந்த பாலதம்புராஜ் ஆகியோர் இன்று சுப்ரமணியபுரம் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரணை நடத்தியதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.இதுகுறித்த தகவல் மதுரை திமுகவினரிடையே பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 -  குளஸ்