Published:Updated:

டி.எஸ்.பி. சுட்டுக்கொலை- உ.பி. அமைச்சர் ராஜினாமா

டி.எஸ்.பி. சுட்டுக்கொலை- உ.பி. அமைச்சர் ராஜினாமா
டி.எஸ்.பி. சுட்டுக்கொலை- உ.பி. அமைச்சர் ராஜினாமா
டி.எஸ்.பி. சுட்டுக்கொலை- உ.பி. அமைச்சர் ராஜினாமா

லக்னோ: டி.எஸ்.பி. சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதையடுத்து உத்தரபிரதேச மாநில உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சர் ராஜா பையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ அருகே பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள பாலிபுரா கிராமத்தின் தலைவரான நானே யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த இந்த மோதலில் காவல்துறை துணை கண்காணிப்பாளரான ஜியா உல் ஹக் மற்றும் கிராமத் தலைவரின் தம்பியான சுரேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில டி.எஸ்.பி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மாநில உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சர் ராஜா பையா மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, அமைச்சர்  ராஜா பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை முதல்வர் அகிலேஷ் யாதவிடம் அளித்துள்ளார்.