Published:Updated:

“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”

“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”

கொந்தளிக்கும் அ.தி.மு.க தொண்டர்கள்...

“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”

கொந்தளிக்கும் அ.தி.மு.க தொண்டர்கள்...

Published:Updated:
“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”
“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”

யிருக்கு உயிராக தாங்கள் நேசித்த தலைவி மறைந்துவிட்ட சோகத்துக்கு மத்தியில், கட்சியின் அடுத்த தலைமை யார் என்ற கேள்வி, அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பூதாகரமாக எழுந்துள்ளது. அ.தி.மு.க தொண்டர் களிடம் ஜெயலலிதாவின் இழப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கம்... அடுத்த தலைமை யார் என்பது பற்றிய அவர்களின் எண்ணம் ஆகியவை குறித்து  போயஸ் கார்டனில் திரண்டிருந்த அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களிடம் கேட்டோம்.

சரஸ்வதி, சென்னை: “கணவனை இழந்து, மூன்று பிள்ளைகளுடன் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், அம்மாதான் இங்கு கடைவைக்க அனுமதி கொடுத்தார். 1991-ல் இருந்து இங்கே சாப்பாட்டுக்கடை வைத்துள்ளேன். அம்மா, கடையைக் கடந்துபோகும் ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்துச் சிரிப்பார். நான் கையெடுத்துக் கும்பிடுவேன். உடல்நிலை சரியில்லாமல் சிறிது நாட்கள் கடையைத் திறக்கவில்லை. முதல்வர் அழைத்ததாக வந்து கூட்டிக்கொண்டு சென்றார்கள். ‘உங்களைப் பல நாட்களாகப் பார்க்        கிறேன். உங்களுடைய கடின உழைப்பு எனக்குப் பிடிக்கும். உடல்நலம் விசாரிக்கவே அழைத்தேன்’ என்றார். பிறகு, அவருடைய டாக்டரை அழைத்து சிகிச்சை அளிக்கும்படி கூறினார். வரு மானம் இல்லாமல் தவிப்பதைக் கண்டு என் கஷ்டத்துக்குப் பணம் கொடுத்தார். அவர், தற்போது இல்லாமல் கடையை திறக்க மனமில்லாமல் இருக்கிறேன்.”

திருவேங்கடம், திண்டுக்கல்: ‘‘20 ஆண்டுகளாக அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருக்கிறேன். அம்மா மறைந்து விட்டார் என்று நான் நினைக்க வில்லை. அம்மா, பாரதி கண்ட புதுமைப்பெண். பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்த தலைவர்களில் அம்மாவுக்கு எப்போதும் தனியான பெயர் இருக்கும். தோல்வி என்பதையே அறியாத அவர், அப்போலோவில்தான் தோல்வி அடைந்து விட்டார். தமிழகத்துக்கு இனி இப்படி ஒரு முதல்வர் கிடைக்க வாய்ப்பில்லை. ஏன், கட்சியிலும் இனி அவரைப் போன்ற தலைவர் யாருமில்லை.”

“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பத் (இதயக்கனி எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர்): “அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கியபோது 17 லட்சம் உறுப்பினர் கள்தான் இருந்தனர். அவரது மறைவுக்குப் பின், கட்சியை வழிநடத்திய அம்மா, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர் கள் கொண்ட கட்சியாக்கினார். ஆலமர மாக கட்சியை வளர்த்தெடுத்த பெருமை அவர்களைத்தான் சேரும். அவரது மறைவுச் செய்தியால், நாங்கள் துவண்டுபோய் உள்ளோம். யார் தலைமை ஏற்பார்கள் என்று தெரியாமல் உள்ளோம். ஆனால், எம்.ஜி.ஆர் உருவாக்கிய - அம்மா வளர்த்த கட்சியை கட்டிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கே யாருக்கும் இல்லை”

கமலா, திருவள்ளூர் : “எம்.ஜி.ஆர் காலத் திலிருந்தே நாங்கள் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறோம். எம்.ஜி.ஆருக்குப் பின்னர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து எங்களுக்கு பல சலுகைகளை அளித்தார். அவர் மரணமடைந்த செய்தி எங்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. முதல்வராக இப்போது பொறுப்பேற்றுள்ள பன்னீர்செல்வத்துக்கோ, அமைச்சர்களுக்கோ எங்களுடைய குறைகள் தெரிய வாய்ப்பில்லை. இனி இருப்பவர்கள் அவரவர் சம்பாதித்துக் கொள்ளவே நினைப்பார்கள். அ.தி.மு.க தொடர்ந்து ஆட்சியில் இருப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். இப்போது உள்ளவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார்? என்பது தெரியாமல் தவிக்கிறோம்.”

ஜோஸ்பின், சென்னை: “பெண்களுக்குப் போராட்ட குணம் இருக்க வேண்டும் என்பதை முதல்வரின் செயல்பாடுகளில் இருந்து தெரிந்துகொண்டோம். அவர்கள்தான் எங்களுக்கு ரோல் மாடல். முதல்வரின் வாழ்கையைப் பார்க்கும் போது, பெண்கள் இன்னமும் அடிமைகளாக இருப்பதை மாற்றி, துணிந்து போராட வேண்டும்  என்ற முதல்வரின் கட்டளையை நாங்கள் தொடருவோம். அவரைப் போன்று போராட்ட குணத்துடன் வாழ்ந்து வெற்றிபெறுவோம்.”

“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”

யுவராஜ், திருவண்ணாமலை: “தொண்டன் என்று சொல்வதைவிட அம்மாவின் தீவிர பக்தன் என்று சொல்வேன். என்னைப் பெற்ற தாய் என்னை விட்டுச் சென்றால் நான் எவ்வாறு இருப்பேனோ, அந்த மன நிலையில்தான் இப்போது உள்ளேன். அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அமைந்திருந்தன. இருண்ட தமிழகத்தை ஒளிபெறச் செய்தவர் அவர். தமிழகம் தற்போது இருளில் முழ்கி உள்ளது. தெய்வத்தாய் தற்போது எங்களைவிட்டுச் சென்றுள்ளதால், துக்கத்தை வெளிப்படுத்தும்விதமாக மொட்டை அடித்துள்ளேன். கட்சியின் முக்கியப் பொறுப்புக்கு இனி வருபவர்கள், அம்மா பெயரை காப்பாற்றுபவராக இருக்க வேண்டும்.”

சரவணன், வேலூர்: “
என் உயிர் இருக்கும் வரை புரட்சித்தலைவியின் பெயரைத்தான் இந்த ‘நா’ உச்சரிக்கும்.அவருடைய இழப்புக்கு அவருடன் இருந்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். 75 நாட்களாக யாரையும் பார்க்கவிடாமல், திடீரென ‘முதல்வர் உயிரிழந்துவிட்டார்’ என்று அறிவித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோமா? நாங்கள் என்ன ஏமாளிகளா? எம்.ஜி.ஆர் மருத்துவ மனையில் இல்லையா? அவருடைய புகைப்படத்தை வெளியிடவில்லையா? ஏன் மருத்துவமனையில் இருந்தபோது முதல்வரின் புகைப்படத்தை வெளியிட வில்லை?”

மனோகரன், தேனி:
“ஆரம்ப காலத்தில் இருந்தே அ.தி.மு.க-வில் இருக்கிறேன். முதல்வர் அம்மா  உலகமே போற்றக்கக்கூடிய வகையில் திட்டங் களைக் கொண்டு வந்தார். இன்று, சாமான்ய, ஏழை மக்களும் வயிறாற சாப்பிடுகிறார்கள் என்றால், எங்கள் இதய தெய்வம் கொண்டுவந்த சிறப்புக்குரிய திட்டங்கள்தான் காரணம். இனி இதுபோன்ற திட்டங்களை மற்றவர்கள் கொண்டு வருவார்களா என்பது சந்தேகம் தான். அ.தி.மு.க-வின் நிலை இனி என்ன ஆகுமோ தெரியவில்லை. எங்களுக் கெல்லாம் கவலையாகத்தான் உள்ளது.”

“சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது!”

செல்வி, தேனி: “விவரம் தெரிந்த நாள் முதல் அம்மாவைத்தான் தெரியும். ஏழை மக்களுக்கு ஏற்றமிகு திட்டங்களை வழங்கினார். பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற திட்டங்களை இனி வரக்கூடியவர் கள் செய்வார்களா  எனத் தெரியவில்லை.”

ஹரிஹரன், சென்னை:
“முதல்வர் அம்மாவைத் தவிர, தலைமைப் பொறுப்புக்கு எங்களால் வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான தகுதி இங்கே யாருக்கும் கிடையாது. அம்மாவின் ரத்த சம்பந்தமான ஜெயலலி தாவின் அண்ணன் மகள் தீபா தலைமைப் பொறுப்புக்கு வந்தால் பரிசீலிப்போம். சசிகலாவை எல்லாம் எங்களால் ஏற்க முடியாது.”

ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற ஆதங்கம்தான் தொண்டர்களின் அத்தனை பதில்களிலும் வேறுவேறு வடிவங்களில் வந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

 - கே.புவனேஸ்வரி
படங்கள்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism