Published:Updated:

மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

Published:Updated:
மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

‘‘அ.தி.மு.க-வுக்குப் புதிய தலைமையாக சசிகலா அறிவிக்கப்பட்டுவிட்டார். தி.மு.க-வுக்கு எப்போது?” என்று கழுகாரிடம் கொக்கிப்போட்டோம்.


‘‘அங்கும் தலைமை மாற்றத்துக்குத் தயார் ஆகிவிட்டார்கள். தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 7-ம் தேதி, காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அதையடுத்து வந்த மூன்றாவது நாளில், அதாவது 10-ம் தேதி, தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனின் அறிக்கை வெளியானது. அதில், ‘தி.மு.க பொதுக்குழு கூட்டம், வரும் 20-ம் தேதி கூட்டப்படும்’ என்ற அறிவிப்பும் இருந்தது. அதனால்தான், இப்போது எனக்குக் கொக்கி போடுகிறீரோ?” என்றபடி சொல்லத் தொடங்கினார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கருணாநிதிக்கு, கடந்த அக்டோபர் 25-ம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் போனது. உடல் முழுக்க கொப்புளங்கள் வந்தன. பெரும்பாலும் படுத்தே இருந்தார். சில நேரங்களில் அவர் பேசியது புரியவில்லை என்றார்கள். ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் வெளியில் எங்கும் செல்லாமல், கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். அப்போதே, தி.மு.க-வுக்குள் ஒரு குரூப் வதந்திகளைக் கிளப்ப ஆரம்பித்தது. மு.க.ஸ்டாலினுக்கு தலைவர் பதவி, மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளர் பதவி, மு.க.ஸ்டாலினுக்குப் புதிய பொறுப்பு என்று பழைய பல்லவிகளைப் புதிய ராகத்தில் சத்தம்போட்டு பாட ஆரம்பித்தது. உச்சக்கட்டமாக, நவம்பர் 29-ம் தேதி, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவில் பேசிய தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘இன்னும் நூறாண்டு காலத்துக்குத் திராவிட இயக்கத்தின் தேவை இருக்கிறது. மேலும், இந்த இயக்கத்தைத் தாங்கி வழி நடத்தும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. தி.மு.க-வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அரியணை ஏறுவார்’ என்று பேசினார். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, கருணாநிதியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகும் சூழல் உருவானது.”

‘‘ஆமாம்!”

‘‘ஸ்டாலினுக்குப் புதிய பொறுப்பு தர வேண்டும் என்று அன்பழகனைச் சந்தித்து துரைமுருகன், நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் சொன்னது பற்றியும், அதை அவர் கருணாநிதி கவனத்துக்குக் கொண்டு போனதையும் கருணாநிதி அதற்கு மறுப்பு தெரிவித்ததையும் நான் உமக்குச் சொல்லி இருந்தேன்.”

‘‘உண்மைதான்!”

மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

‘‘கருணாநிதியை எப்படியாவது மன மாற்றம் செய்துவிடுவார்கள் என்று ராசாத்தி அம்மாளும் அழகிரியும் நினைத்தார்கள். அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். ‘உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், ஸ்டாலின் நாற்காலியைப் பிடிக்கும் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார்’ என்று இவர்கள் கோபத்தோடு சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த சலசலப்பு அதன்பிறகு வந்த நாட்களில் கடுமையாக எதிரொலித்தது. ‘அழகிரிக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியும் அழகிரி மகனுக்கு தி.மு.க. அறக்கட்டளை உறுப்பினர் பதவியும் தரப்போகிறார்கள். அதற்கு அவர்கள் இருவரும் சம்மதித்துவிட்டார்கள்’ என்றும் செய்தி பரவியது. இதற்கு அழகிரி தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. ‘அண்ணனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வேண்டும். துரை தயாநிதிக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவி வேண்டும்’ என்று அழகிரி ஆட்கள் மதுரையில் செய்தி பரப்பினார்கள். இவை அனைத்தும் ஸ்டாலின் காதுக்குப் போனபோது, ‘முதலில் தலைவர் பதவியைக் கொடுங்கள், மற்றவர்கள் பற்றி அப்புறம் பேசலாம்’ என்று கையை விரித்தாராம்.”

‘‘கனிமொழி?”

‘‘அவருக்காகத்தான் ராசாத்தி அம்மாள் குரல் எழுப்பி வருவதாகச் சொல்கிறார்கள். மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் கனிமொழி இப்போது எம்.பி-யாகவும் இருக்கிறார். இவை தொடர்ந்து... தனக்கு உரிய மரியாதை கிடைத்தால்போதும் என்று கனிமொழி நினைக்கிறார். கருணாநிதி காலத்துக்குப் பிறகும் கனிமொழியின் செல்வாக்கு தொடர வேண்டும் என்று ராசாத்தி முயற்சிகள் எடுத்துவருகிறார். காவேரி மருத்துவமனையில் இருந்து கடந்த 7-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார் கருணாநிதி. அன்று ராசாத்தி அம்மாள் மருத்துவமனைக்கு மாலை 5 மணிக்கே சென்றுவிட்டார். அங்கிருந்து கருணாநிதியை சி.ஐ.டி காலனி வீட்டுக்கு அழைத்துப்போவது அவர் திட்டம். ஒரு மாதத்துக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டிலேயே இருந்த கருணாநிதியை, இதன்பிறகு தன் வீட்டில் வைத்துக்கொள்ள ராசாத்தி அம்மாள் விருப்பப்பட்டார். ஆனால், காவேரி மருத்துவமனைக்கு வந்த ஸ்டாலின், கருணாநிதியை சி.ஐ.டி காலனி வீட்டுக்கு அனுப்ப மறுத்து விட்டார். ‘நான் கோபாலபுரத்தில் தலைவருக்கான அறையை அவருக்கு வசதியாக மாற்றி வைத்துள்ளேன். அதனால், அவரை அங்கு அழைத்துப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டாராம்.  கருணாநிதி சி.ஐ.டி காலனி வீட்டுக்குப் போய்விட்டால், இப்போதைக்கு அவரை அங்கிருந்து கோபாலபுரத்துக்கு அழைத்துவர முடியாது. அதன்பிறகு, சி.ஐ.டி காலனி வீடு அதிகாரமையமாக மாறிவிடும் என்பது ஸ்டாலினின் எண்ணம். இதையொட்டி காவேரி மருத்துவமனையிலேயே ராசாத்தி அம்மாளுக்கும் ஸ்டாலினுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது என்கிறார்கள்.”

‘‘ம்!”

‘‘ஸ்டாலின், ‘கோபாலபுரம் வீட்டுக்கு ராசாத்தி அம்மாள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம். நாங்கள் அதற்கு தடை விதிக்கவில்லையே! தலைவர் இங்கே இருப்பதுதான் நல்லது’ என்று சொன்னாராம். கடந்த ஒரு மாத காலமாக கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி இருந்தபோது தினமும் காலையும் மாலையும் ராசாத்தி அம்மாள் வந்து பார்த்துச் சென்றார் என்பதையும் இவர்கள் நினைவூட்டுகிறார்கள்.”

‘‘சரி!”

மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

‘‘கருணாநிதி வீட்டுக்கு வந்த நிலையில், அவருக்கு இன்னும் உடல்நிலை முழுமையாக குணமடையாத நிலையில்தான், தி.மு.க பொதுக்குழு கூட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தி.மு.க தரப்பில் ஏற்பட்டுள்ளது. தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது, ‘கருணாநிதி தற்போது எதையும் நினைக்கும் நிலையில் இல்லை. ஆனால், நிச்சயமாக, மு.க.ஸ்டாலினுக்கு புதிய பொறுப்புகளைக் கொடுப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. உடல்நிலை, ஞாபக சக்தி எல்லாம் பழுதடைந்துள்ள நிலையில் கருணாநிதி, தீவிர மன உளைச்சலில் இருக்கிறார் என்கிறார்கள். யாராவது தன்னை வந்து பார்த்தால், ‘உங்க தலைவர் என்ன சொல்கிறார்?’ என்று கிண்டலாக கருணாநிதி கேட்கிறாராம். பொதுக்குழு தேதி அறிவித்ததும் ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி தரப்போகிறார்கள் என ஸ்டாலின் தரப்பினர் செய்தி பரப்புவதாக கருணாநிதியே சந்தேகப்படுகிறாராம். ‘தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுக்கப்படாது. ஏனென்றால், தலைவர் இந்த நிலையில் இருக்கும்போது, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்’ என்று அழகிரி சொல்லி வருகிறார். அதையும் மீறி ஸ்டாலினுக்குப் புதிய பொறுப்புக் கொடுத்தால், அடுத்தகட்டமாக தனது நடவடிக்கை அதிரடியாக இருக்கும் என்று சொல்லி வருகிறாராம்” என்றார்.

‘‘அ.தி.மு.க-வில் புதியதாக ‘சின்னம்மா’ பதவி உருவாக்கப்பட்டுள்ளதே?”

‘‘சின்னம்மா அல்ல. சின்ன அம்மா என்று சொல்லச் சொல்கிறார்கள். சின்ன அம்மா பொறுப்பு எப்போதும் இருக்கிறது. இதுவரை நிழலாக இருந்த சின்ன அம்மா இப்போது, நிஜமாக மாறி உள்ளார் என்பதுதான் முக்கியமான திருப்பம்.”
‘‘சசிகலாவை பொதுச்செயலாளராக நிர்வாகிகள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா?”

‘‘கிட்டதட்ட அந்த மனநிலைக்கு அனைவரையும் கொண்டு வந்துவிட்டார்கள். அதற்கான ஒத்திகைதான் வியாழக்கிழமை அன்று திடீர் என ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா விசிட் செய்தது. அவருடன் முக்கிய அமைச்சர்கள் சேர்ந்து வருகை தந்தது. இது எல்லாம், அ.தி.மு.க தொண்டர்கள் மனநிலையை மாற்றத்தான். சனிக்கிழமை அன்று காலை அமைச்சரவை கூட்டத்துக்குக் கிளம்பும் முன் அனைத்து அமைச்சர்களும் கார்டனில் இருந்து கிளம்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தார்கள். வாசலில் இருந்த ஜெயலலிதா படத்தை வணங்கிவிட்டு கிளம்பத் தயார் ஆனார்கள். சொல்லிவைத்தது போல, ‘நீங்கள்தான் அடுத்து பொதுச்செயலாளர் ஆகவேண்டும்’ என்று மதுசூதனன் சொல்ல, அதை செங்கோட்டையன் தொடர, அனைவரும் அதையே வலியுறுத்தினார்கள். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்பீர்களே. ஜெயா டி.வி-யில் இருந்து அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் இந்தப் பதிவுகள் கொடுக்கப்பட்டன. இதற்கான வேலைகளை பின்னால் இருந்து பார்த்தது, செய்தித் துறையில் பணி நீட்டிப்பில் இருக்கும் எழில் என்ற அதிகாரிதான். பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னணித் தலைவர்கள் சொல்லி வருவதற்கு கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே உள்ள ரியாக்‌ஷன்களையும் செய்தித்துறை அதிகாரிகளும் போலீஸ் இலாகாவில் உள்ள சி.ஐ.டி போலீஸாரும் கணக்கெடுத்து வருகிறார்கள். தொண்டர்கள் எதிர்பார்ப்புகளை சரிசெய்ய சசிகலா என்னென்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலும் ரெடி பண்ணி அதற்கு ஏற்ப அடுத்த கட்ட மூவ்களை மாற்ற சசிகலா ரெடியாகி வருகிறார்.”

‘‘ஜெயலலிதாவின் நாற்காலியில்  சசிகலா அமர்ந்துவிட்டாரே?”

‘‘ஜெயலலிதாவுக்கு இறுதிச் சடங்கு நடந்த அடுத்த நாள், சோ-வுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்று வந்து விட்டார் சசிகலா. இதுவரை காரின் பின் ஸீட்டில் உட்காரும் சசிகலா அன்று முன் ஸீட்டில் உட்கார்ந்து வந்தார். அவர் அஞ்சலி செலுத்திய காட்சியை வெளியிட்டார்கள்.

அ.தி.மு.க-வில் உச்ச அதிகாரம் தான்தான் என்பதை அந்த நிகழ்வு நிரூபித்துவிட்டது என்று கட்சியினர் சொல்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: “உங்க தலைவர் என்ன சொல்றார்?” - கொந்தளித்த கருணாநிதி

‘‘சசிகலா குடும்பத்தில் என்ன நடக்கிறதாம்?”

‘‘சசிகலா குடும்ப உறுப்பினர்களை அ.தி.மு.க நிர்வாகிகள் மொய்க்கும் படலம் ஆரம்பித்துவிட்டது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் வரிசைகட்டி நின்ற மன்னார்குடி குடும்பத்தால் சசிகலாவுக்கு கெட்ட பெயர் வந்துவிட்டது என்று ரிப்போர்ட் ஆகி இருக்கிறது. அதனால் அவர்கள், ‘சசிகலாதான் இனி எல்லாம், நாங்கள் யாரும் கட்சியில் தலையிட போவதில்லை’ என்று சொல்லிவைத்தது போல் பேசி வருகிறார்கள். ஆனால், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. மன்னார்குடியின் முக்கியப் புள்ளி ஒருவரை சந்திக்க அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் சென்றுள்ளார். வெளியே நின்ற அவருடைய உதவியாளர், ‘அண்ணனைப் பார்த்ததும் முதலில் அவர் காலில் விழுந்துவிட்டுத்தான் நீங்கள் பேசவே தொடங்க வேண்டும்’ என்று கட்டளை போட்டு உள்ளே அனுப்ப, தலைவிதியை நொந்துகொண்டு தன்னைவிட 20 வயது குறைவான அந்தக் குடும்பத்து உறுப்பினர் காலில் விழுந்து எழுந்துள்ளார் அந்த நிர்வாகி. அப்படியேத்தான் அமைச்சர்களும் வரிசைகட்டி மன்னார்குடி வகையறாக்களின் வீடுகளுக்குச் சென்று தனி மரியாதை செலுத்தி வருகின்றனர். காலில் விழ கூச்சப்பட்டால் அதிகாரம் கிடைக்குமா? சைரன் வைத்த காரில் உலா வர முடியுமா?”

‘‘பொதுக்குழு எப்போது கூடுகிறது?”

‘‘பொதுக்குழுவைக் கூட்டித்தான் பொதுச்செயலாளரை முறைப்படி தேர்ந்தெடுத்து அறிவிப்பு வெளியிட இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வழக்கமாக, சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டம்,  கடந்த ஆண்டு திருவான்மியூரில் நடந்தது. இந்தத் தடவை மதுரையில் நடக்க இருக்கிறதாம். அங்கு நடத்தினால்தான் இப்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு கூட்டத்தை எவ்வித களேபரமும் இல்லாமல் நடத்த முடியும் என்று திட்டமிடுகிறார்களாம். சசிகலாவுக்கு எதிர்ப்பு என்று எந்த வகையிலும் செய்தி வெளியாகாமல் தடுக்கத்தான் மதுரைக்கு மாற்றம் என்கிறார்கள்.’’

‘‘சசிகலாதான் பொதுச்செயலாளரா?”

‘‘அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஜோராக நடந்து வருகின்றன. அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் மன்னார்குடி தரப்பில் இருந்து போன் போய், பொதுச்செயலாளராக சசிகலா வை நியமிக்க உங்கள் மாவட்டத்தில் ஆதரவு தெரிவித்த தீர்மானம் நிறைவேற்றி, அதை பத்திரிகை களுக்கு தெரிவியுங்கள் என்று சொல்லியுள்ளார்கள். அனைத்து நிர்வாகிகளும் தங்களது லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா பெயரை முன்மொழிந்து அந்த மாவட்டச் செயலாளர்களிடம் கடிதம் கொடுக்கவும் உத்தரவு போய் இருக்கிறது. இப்போது அந்தக் கடிதங்களை வாங்கும் வேலைகளில் மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். சசிகலா பொறுப்புக்கு வர, அனைத்து வேலைகளும் ஜோராக நடைபெற்று வருகின்றன’’ என்றபடி பறந்தார் கழுகார்.

படம்: மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism