Published:Updated:

"கொலை செய்தவர்களே உண்மைக் கணக்கை எப்படிக் கூறுவார்கள் ?" உண்மை கண்டறியும் குழு

"கொலை செய்தவர்களே உண்மைக் கணக்கை எப்படிக் கூறுவார்கள் ?" உண்மை கண்டறியும் குழு

"கொலை செய்தவர்களே உண்மைக் கணக்கை எப்படிக் கூறுவார்கள் ?" உண்மை கண்டறியும் குழு

"கொலை செய்தவர்களே உண்மைக் கணக்கை எப்படிக் கூறுவார்கள் ?" உண்மை கண்டறியும் குழு

"கொலை செய்தவர்களே உண்மைக் கணக்கை எப்படிக் கூறுவார்கள் ?" உண்மை கண்டறியும் குழு

Published:Updated:
"கொலை செய்தவர்களே உண்மைக் கணக்கை எப்படிக் கூறுவார்கள் ?" உண்மை கண்டறியும் குழு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இந்திய அரசியலையே அதிரவைத்துள்ளது. அந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அதிரவைக்கும் அரசியல் இருப்பதாகச் சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த அடிப்படையில் சுய ஆட்சி இந்தியா அமைப்பு தூத்துக்குடிக்கு நேரில் சென்று உண்மை கண்டறியும் சோதனையை நடத்தியுள்ளது. அது தொடர்பான அறிக்கையை மக்கள் மன்றத்தின் முன்பு சமர்ப்பித்துள்ளது.  

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர் கிரியஸ்டியானா சாமி, "தூத்துக்குடியில் நாங்கள் போய் இறங்கியபோது காஷ்மீர் எல்லைக்குள் வந்து இறங்கியது போன்ற உணர்வு இருந்தது. போலீஸார் அனைவரும் மிகுந்த கோபத்துடனும்,வெறுப்புடனும் மக்களைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அதோடு மக்கள் மிகுந்த அச்சமுடன் அந்த சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் உறைந்து போயிருந்தனர். இந்த நிலையில்தான் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களையும் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் சந்தித்துப் பேசினோம். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சொன்ன பதில், 'போலீஸார் அத்துமீறி கண்ணில் கண்டவர்களை எல்லாம் சுட்டார்கள்' என்றதுதான். அதுவும் நெற்றி, கண், மார்பு ஆகிய பகுதிகளைக் குறிவைத்து தாக்கியதை அவர்கள் அலறல் சத்தத்துடன் விவரித்தனர். அதில் குறிப்பாக, இந்தத் தாக்குதலில் காயமடைந்த எடிக்க்ஷன் என்பவர், 'போராட்ட நாள் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் இருந்து புகைமூட்டம் வந்தது. அந்த நேரத்தில்தான் போலீஸார் உள்ளே நுழைந்து தாக்கினர். அதில் இருந்து தப்பிக்க மக்கள் சிதறியடித்து ஓடியபோது குழந்தைகளும் பெண்களும் நெரிசலில் சிக்கினர். அதைக் கண்ட கந்தையன் என்பவர் கூட்டத்துக்குள் புகுந்து நெரிசலில் சிக்கிய குழந்தைகளை மீட்டார். அப்போது எதிர்பாராத வகையில் அவர்மீது முதல் குண்டு பாய்ந்தது. அவரைத் தொடர்ந்து அங்கு மீண்டும் மீண்டும் குண்டுகள் பாய்ந்து மனித உடல்கள் சரிந்தன' என்றார் எடிக்க்ஷன். 

அவரைத் தொடர்ந்து இறந்துபோன ஸ்நோலினின் தோழி பேசுகையில், `போலீஸாரின் மிக மோசமான தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக நாங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில், எங்களுக்கு முன்பாக இருந்த ஸ்நோலின் மீது குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தாள். அவளைத் தொடர்ந்து அந்த வளாகத்தைச் சுற்றி மளமளவென 8 பேர் ரத்தவெள்ளத்தில் வீழ்ந்ததைப் பார்க்க முடிந்தது' என்றார். அவர்கள் இருவரும் சொன்ன கருத்துகளை எங்கள் அறிக்கையில் இணைத்துள்ளோம். இதுதவிர, போராட்டத்தில் பங்கேற்றவர்களைத்தான் கொன்று குவித்தார்கள் என்றால், இந்தப் போராட்டத்துக்குத் தொடர்பில்லாத டீச்சர்ஸ் காலணியில் இருந்த அந்தோணி செல்வராஜ் என்பவரையும் போலீஸார் குழுவாகச் சென்று துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதுகுறித்து அவருடைய குடும்பத்தாரையும் சந்தித்துப் பேசினோம். அதேபோன்று, போராட்டக்களத்துக்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த திரேஸ் புரத்துக்குச் சென்ற காவலர்கள் கண்ணில் கண்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 50- க்கும் மேற்பட்டோர் காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் பொதுவெளியில் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் விவரம் நம்மால் அறிய முடிகிறது. அதற்கப்பால் போலீஸாரால் பிடித்துச் சென்றவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் ஏராளம். அதேபோன்றுதான், இறப்பு விவரத்தைத் தமிழக அரசு 13 பேர் என்று கூறியுள்ளது. ஆனால், 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதில் உண்மை நிலவரத்தை இந்த அரசாங்கம் வெளியிடுமா? நிச்சயமாக வெளியிடாது. கொலையைச் செய்தவர்களே உண்மைக் கணக்கை எப்படிச் சொல்வார்கள்? இதை விசாரிக்க அரசாங்கம் அமைத்துள்ள ஒருநபர் கமிஷன் விசாரணை சரியாக இருக்காது. இதில் மனித உரிமை ஆணையமும், நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் அடிப்படையில் சிறப்புப் பிரதிநிதிகளும் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். அப்படியான ஒரு விசாரணை இருந்தால், நாங்கள் பதிவுசெய்துள்ள இந்த விவரங்களைச் சமர்ப்பிப்போம்.மேலும், இதுகுறித்த தகவல்களை மனித உரிமை ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கும் வரை எங்களுடைய சட்டப் போராட்டம் தொடரும்" என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism