மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 2 - சசிகலா சரித்திரம்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 2 - சசிகலா சரித்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 2 - சசிகலா சரித்திரம்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 2 - சசிகலா சரித்திரம்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 2 - சசிகலா சரித்திரம்!

படம்: சு.குமரேசன்

1984-ம் ஆண்டு. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்துக்குள் தயங்கியபடியே நுழைகிறார் அந்தப் பெண். அலுவலக மேனேஜர் துரையிடம் போய் நிற்கிறார். ‘‘கடலூர் கலெக்டர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மேடம் சொல்லியிருக்காங்க... மேடத்தைப் பார்க்க வந்திருக்கிறேன்’’ எனச் சொல்லி தனது விசிட்டிங் கார்டை நீட்டினார். அதில் ‘வினோத் வீடியோ விஷன்’, புரொப்பரைட்டர் என்.சசிகலா, நம்பர் 33, பீமண்ண கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 என எழுதப்பட்டிருந்தது.

சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முன்பு அ.தி.மு.க-வில் சேர்ந்தார் ஜெயலலிதா. 1984-ல் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார். அப்போது பொதுக்கூட்டங்களில் பேசுவதற்காக மாவட்டம் தோறும் டூர் போய்க்கொண்டிருந்தார் ஜெயலலிதா. கடலூர்தான் முதல் ஸ்பாட். அங்கே கலெக்டராக இருந்தவர் சந்திரலேகா. பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது சந்திரலேகா மீது ஆசிட் அடிக்கப்பட்டது எல்லாம் தனிக் கதை. ‘‘அம்மு முதன்முறையாக உங்க மாவட்டத்துல பேசுறாங்க.. அவங்களுக்கு சிறப்பான கவரேஜ் கொடுங்க’’ என சந்திரலேகாவிடம் சொல்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது கடலூர் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ) சசிகலாவின் கணவர் நடராஜன் இருந்தார். அவரை அழைத்து ஜெயலலிதாவுக்கு சிறப்பான கவரேஜ் தர சொல்கிறார் சந்திரலேகா. பி.ஆர்.ஓ வேலை மீடியாவோடு தொடர்புடையது. அதனால், ஜெயலலிதாவுக்கு பத்திரிகைகளில் நல்ல கவரேஜ் கிடைக்கிறது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் கவரேஜ் தரச் சொல்லி சந்திரலேகாவை எம்.ஜி.ஆர் வற்புறுத்த... அந்தப் பணி நடராஜனுக்கே கிடைக்கிறது.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 2 - சசிகலா சரித்திரம்!அதற்கு முன் சின்ன ஃப்ளாஷ்பேக்... பீமண்ண கார்டன் தெருவில் 33 நம்பர் வீட்டில்தான் நடராஜனும் சசிகலாவும் வாழ்ந்து வந்தார்கள். அரசு வேலையை நடராஜன் பார்த்துக்கொண்டிருக்க... மனைவிக்கு ஒரு தொழிலை வைத்துக்கொடுக்க நினைத்தார் நடராஜன். பி.ஆர்.ஓ என்பதால் அது சார்ந்த தொழிலா இருந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என கணக்குப் போட்டு வீடியோ தொழிலை சசிகலாவுக்கு ஏற்படுத்தித் தந்திருந்தார். போட்டோக்கள் மட்டுமே இருந்த காலத்தில் புதிய தொழில்நுட்பமாக வந்த வீடியோவை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ‘ஜெயலலிதாவுக்கு கவரேஜ் கொடுங்கள்’ என மேலிடத்தின் உத்தரவை ‘வினோத் வீடியோ விஷன்’ மூலம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் நடராஜன். சசிகலாவின் அண்ணன் விநோதகன் நினைவாகத்தான் ‘வினோத் வீடியோ விஷன்’ பிறந்தது.

சந்திரலேகாவின் சிபாரிசோடு விசிட்டிங் கார்டை எடுத்துக்கொண்டு ஜெயலலிதாவை சந்திக்கப் போனார் சசிகலா. ஜெயலலிதாவும் சசிகலாவும் முதன்முறையாக சந்தித்துக்கொள்கிறார்கள். அந்தப் புள்ளியில் தொடங்குகிறது அடுத்த 30 ஆண்டுகளுக்கான அ.தி.மு.க-வின் அரசியல் அத்தியாயம். உயிர்த் தோழி ஆகி, போயஸ் கார்டனுக்கு வேலியான கதை பல அத்தியாயங்களைக் கொண்டது.

திருத்துறைப்பூண்டிதான் சசிகலாவின் பூர்வீகம். அங்கே மெடிக்கல் ஷாப் நடத்திவந்த சந்திரசேகரன்தான் சசிகலாவின் தாத்தா. சந்திரசேகரனின் மகன் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என 6 வாரிசுகள். இந்த வாரிசுகளும் அவர்களின் வாரிசுகளும் பெண் எடுத்தவர்களும் கொடுத்தவர்களும் சேர்ந்து மன்னார்குடி மகா சமுத்திரம் ஆனது. இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆரின் கட்சியை ஆட்டிப்படைத்து வருகிறார்கள்.

திருத்துறைப்​பூண்டி வடக்குச் செட்டித் தெருவில்தான் விவேகானந்தன் குடும்பம் வசித்து வந்தது. அங்கே போர்டு ஹைஸ்கூலில் 10-ம் வகுப்பு வரை படித்தார் சசிகலா. படிப்பைவிட விளையாட்டில் ஆர்வம் அதிகம். ஓட்டப் பந்தயங்களில் அவர் வாங்கிக் குவித்த பரிசுகளே அதற்கு சாட்சி. பிறகு மன்னார்குடி ஏரியாவுக்கு இடம்பெயர்கிறது விவேகானந்தன் குடும்பம். அங்கேதான் சசிகலாவின் திருமணம் நிச்சயம் ஆகிறது. புகுந்த வீட்டுக்குப் போகிறார். அந்த ஊரின் பெயர் விளார். சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் ஊர்.

-அடுத்த இதழில்...

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி