Published:Updated:

“நாங்க அப்பவே ஆதரிச்சவங்க!” - ரவுண்டு கட்டும் சசி பேரவையினர்

“நாங்க அப்பவே ஆதரிச்சவங்க!” - ரவுண்டு கட்டும் சசி பேரவையினர்
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்க அப்பவே ஆதரிச்சவங்க!” - ரவுண்டு கட்டும் சசி பேரவையினர்

“நாங்க அப்பவே ஆதரிச்சவங்க!” - ரவுண்டு கட்டும் சசி பேரவையினர்

ஜெயலலிதா இருந்த நேரம். சசிகலாவுக்கு போஸ்டர் அடித்தும் பேரவை அமைத்தும் அமளி செய்தனர் சிலர். அவர்களைக் கட்சியைவிட்டே நீக்கினார் ஜெ. இப்போது ஜெ., இல்லை. மீண்டும் அவர்களின் போஸ்டர், பேரவை சமாசாரங்கள் களைகட்டத் தொடங்கியிருக்கின்றன.

“நாங்க அப்பவே ஆதரிச்சவங்க!” - ரவுண்டு கட்டும் சசி பேரவையினர்

சசிகலா பெயரில் 20 வருடங்களுக்கு முன்பே பேரவையைத் தொடங்கிய சசிகலாவின் ஆதரவாளரான வழக்கறிஞர் சேதுராமனை உசிலம்பட்டியில் சந்தித்தோம்.

“நான் தீவிர எம்.ஜி.ஆர். வெறியன். சட்டக் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே அ.தி.மு.க-வுக்காக வேலை செய்தவன். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் புரட்சித்தலைவி அம்மாவுக்காகக் கட்சிப் பணியாற்றினேன். அம்மாவுக்கு எல்லா வகையிலும் உதவி செய்துவந்த சின்னம்மா மீது பெரிய மரியாதை ஏற்பட்டது. புரட்சித் தலைவியை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்ட எதிர்க் கட்சியினரும், சில துரோகிகளும் முயற்சி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நாங்க அப்பவே ஆதரிச்சவங்க!” - ரவுண்டு கட்டும் சசி பேரவையினர்

செய்தபோது அந்தச் சூழ்ச்சிகளை முறியடித்து அம்மாவை தமிழகத்தின் முதலமைச்சராக்கப் பாடுபட்டவர் சின்னம்மா. தமிழகத்திலயே முதன்முதலாக ‘சசிகலா அம்மா’ பேரவையை 17-8-95-ல்  உசிலம்பட்டியில் ஆரம்பித்தேன். அதற்கு செயலாளர் நான்தான். நான் ஆரம்பித்த பேரவையை பற்றிய செய்திகளை, விளம்பரங்களைப் பார்த்தவுடன் கட்சியிலிருந்த சிலருக்குக் கடுப்பாகிவிட்டது. காவல் துறை வந்து விசாரித்தது. ‘நீங்கள் யார், உங்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது’ என்றெல்லாம் விசாரித்தார்கள். எங்களை விசாரித்த காவல் துறையினர், கார்டனில் அம்மாவைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுத்தார்கள். அப்போது என்னிடம் பேசிய அம்மா,  ‘இப்போதைக்கு இது போன்ற பேரவை தேவை இல்லை. கட்சி வேலை செய்யுங்க’ என்று அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தார். 

உடனே, எனக்குப் புறநகர் மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் பொறுப்பு கொடுத்தாங்க. அதன் பிறகு புறநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் பொறுப்புக் கொடுத்தாங்க. அப்புறம் அம்மா பேரவை இணைச்செயலாளர் பதவி கொடுத்தாங்க. சில காரணங்களுக்காக சின்னம்மாவை கார்டனிலிருந்து வெளியேற்றும்போது என்னுடைய கட்சி பொறுப்பையும் பறித்துவிட்டனர். நான் சின்னம்மா ஆதரவாளராக இருப்பதாலேயே ஒவ்வொரு தேர்தலிலும் நான் சீட் கேட்கும்போது என்னை நிராகரித்துவிடுவார்கள். அதுமட்டுமில்லை, போலீஸ் எங்களை எப்போதும் விசாரணை வளையத்துக்குள்ளேயே வைத்திருந்தது.

“நாங்க அப்பவே ஆதரிச்சவங்க!” - ரவுண்டு கட்டும் சசி பேரவையினர்

சின்னம்மா பேரவையை நான் ஆரம்பித்தபோது என்னோடு இருந்த சில நிர்வாகிகள் டபுள் கேம் ஆடி பதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள். நான் காசு, பதவிக்காக சின்னம்மாவை ஆதரிக்கவில்லை. எப்போதுமே சின்னம்மா ஆதரவாளன். தற்போதைய சூழலில் சின்னம்மா ஒருவரால்தான் கட்சியை சிறப்பாக வழி நடத்தமுடியும். அதற்காக என்னைப் போன்றவர்கள் எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

“நாங்க அப்பவே ஆதரிச்சவங்க!” - ரவுண்டு கட்டும் சசி பேரவையினர்

சசிகலா ஆதரவாளரும் திருவாரூர் முன்னாள் மாவட்டச் செயலாளருமான எம். ராஜேந்திரனிடம் பேசினோம். “எம்ஜிஆர் காலத்திலிருந்து தி.மு.க-வுக்கு எதிராக நின்று களம் கண்டவன் நான்.இறுதிமூச்சு வரை அ.தி.மு.க தொண்டனாகவே இருந்துவிட்டுப் போவதுதான் என்னுடைய லட்சியம். நான் ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்தபோது அம்மா என்னை வந்து பார்த்தார். கட்சிக்காரர்கள் மீது தனி மரியாதைவைத்திருந்த அப்படிப்பட்ட அம்மா மறைந்துவிட்டார். அவரைப்போலவே கட்சிக்காரர்கள் மீது அன்பு வைத்திருப்பவர் சின்னம்மா மட்டும்தான். அவரால்தான் கட்சியை வழிநடத்த முடியும். கிட்டதட்ட 30 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்து பழகியவர். எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டவர். அவரைத்தவிர வேறு யாரும் அ.தி.மு.க-வுக்குத் தலைமைத் தாங்க முடியாது. சின்னம்மா அதிகம் பேசமாட்டார், ஆனால், செயலில் காட்டிவிடுவார். அ.தி.மு.க-வை வழிநடத்தும் அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத அடுத்த சக்தி சின்ன அம்மாதான்” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி, செ.சல்மான், ஏ. ராம்
படங்கள்: சு.குமரேசன், ஈ.ஜெ.நந்தகுமார், க.சதீஷ்குமார்

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் ஒரு சிலரில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். கட்சி, ஆட்சி இரண்டிலும் எந்தப் பதவியிலும் இல்லாமல் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் குறித்து திடீரென வாட்ஸ் அப் தகவல்கள் உலாவந்தன. எதிர் அணி திரட்டுகிறார் என்றனர். உடனே, சசிகலா தரப்பில் செங்கோட்டையனிடம் பேசப்பட்டது. இப்போது அவருக்குக் கட்சிப் பதவியோ அல்லது ஆட்சியில் பதவியோ வழங்கப்படும் என்று பேசப்படுகிறது. இதனால்தான் தன்னைப் பற்றிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் செங்கோட்டையன் கூறியிருக்கிறார் என்கிறார்கள். அதேபோல மேலும் சிலரை சமாதானப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன.