Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

? ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு ஆன செலவை யார் கொடுப்பார்கள்?

! முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போது செய்யப்பட்ட செலவு என்பதால் அதனை அரசாங்கம் தரும். ஆனால், ‘அக்காவுக்கு ஆன செலவை நானே தருவேன்’ என்று சசிகலா சொல்லி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதைக் கூடச் செய்யமாட்டாரா சசிகலா? (அப்போலோவுக்கு வராக் கடன் இருக்காது.)

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

? இன்னமும் பணத்தட்டுப்பாடு தீரவில்லையே?

! 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் சகஜமாகக் கிடைக்கும் நிலைமை உருவாகும் வரை பணத்தட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். வங்கிகளுக்கு இதுவரை செலுத்தப்பட்ட பணம் ரூ.12 லட்சம் கோடி என்றும் மக்களுக்கு வங்கி இதுவரை தந்துள்ள பணம் ரூ.4 லட்சம் கோடி என்றும் ரிசர்வ் வங்கி தகவல் தந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு பணம்தான் வெளியில் கிடைத்துள்ளது. பணத்தட்டுப்பாடு எப்படித் தீரும்? இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொல்லி இருக்கிறார். மூன்று மூன்று வாரங்களாக அவரும் நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறார். மக்களை ‘கேஷ்லஸ்’ வர்த்தகத்துக்குக் கட்டாயமாக்கி வருகிறார்கள்.

எஸ்.ராமசாமி, குட்டைத்தயிர்பாளையம்.

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz? ஸ்டாலினும் அழகிரியும் சமரசம் ஆகிவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?

! அப்படி எதுவும் இல்லை.

கருணாநிதியின் மகனாக அழகிரி கோபாலபுரம் வீட்டுக்கு வரட்டும், அப்பா அம்மாவைப் பார்க்கட்டும், நலம் விசாரித்துச் செல்லட்டும் என்பதைத் தாண்டி எந்த நகர்வும் ஸ்டாலின் தரப்பில் இருந்து இதுவரை இல்லை. எனவே சமாதானம், சமரசம் என்பது இதுவரை இல்லை.

எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்.

? வாரிசு அரசியல் என்பது, குடும்பச் சொத்தாகக் காட்சி அளிப்பதில் எல்லாக் கட்சிகளுக்கும் சம பங்கு உண்டா?

! கருணாநிதி குடும்பத்திடம் தி.மு.க-வும், சசிகலா குடும்பத்திடம் அ.தி.மு.க-வும் சோனியா குடும்பத்திடம் காங்கிரஸ் கட்சியும், விஜயகாந்த் குடும்பத்திடம் தே.மு.தி.க-வும்... என்று அடுக்கிக்கொண்டே போவது மாதிரித்தான் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் நிலைமை உள்ளது. கட்சிக்கும் குடும்பத்துக்கும் வித்தியாசம் இல்லாதது மாதிரித்தான் காட்சிகள் இருக்கின்றன. அப்பா மந்திரியாக இருந்தால் மகனை அரசியலுக்குக் கொண்டுவருகிறார். கணவர்கள், மனைவிக்குப் பதவி வாங்கித் தருகிறார்கள். அண்ணன்கள், தங்கைகளை உள்ளாட்சி நிர்வாகத்தில் புகுத்துகிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால், குடும்ப சொந்தங்களிடம் பொறுப்பைக் கொடுத்தால் தங்களுக்கு அடங்கி இருப்பார்கள் என்ற நினைப்புத்தான். எல்லாக் குடும்பங்களும் அப்படி இருப்பது இல்லை என்பதுதான் யதார்த்தம்.

கருணாநிதி குடும்பத்துக்குள் அண்ணன் - தம்பி சண்டை, சோனியா குடும்பத்துக்குள் ராகுலுக்கும் பிரியங்காவின் கணவனுக்கும் மோதல், தாமரைக்கனி வீட்டில் மகன்களுக்குள் மோதல், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிராக அவரது மகனே முஷ்டியை உயர்த்துகிறார். இப்படி குடும்ப அரசியல் என்பது குத்து வெட்டு அரசியலாகவும் மாறிக்கொண்டு வருகிறது. திருமணமே செய்துகொள்ளாத காமராஜர், வாஜ்பாய், நரேந்திர மோடி போன்றவர் விதிவிலக்கு.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

? ‘தமிழகத்தில் அரசியலும் கறுப்புப் பணமும் ஒன்றாகக் கலந்துள்ளது’ என்று பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான முரளிதர ராவ் சொல்லி இருக்கிறாரே?


! தமிழகத்தில் மட்டுமா கலந்துள்ளது? அகில இந்தியா முழுக்கவே அரசியலும் கறுப்புப் பணமும் கலந்துள்ளது என்றுதானே மத்திய அரசு சமீபத்திய நடவடிக்கை எடுத்துள்ளது? எந்த அரசியலில் இல்லை என்பதை முரளிதர ராவ் இன்னும் விளக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும்.

கழுகார் பதில்கள்

எஸ்.ராமதாஸ், சேலம்.

? போட்டி சட்டமன்றம் மாதிரி ராதா ரவியும் சரத்குமாரும் இணைந்து போட்டி நடிகர் சங்கம் ஆரம்பிப்பார்களா?

! கட்டடம், இடம், மனை யாராவது கொடுத்தால் யாரும் ஆரம்பிப்பார்கள்!?

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

? ‘நான் அரசியலில் இல்லை. அரசியல் தொடர்பான எந்தக் கேள்வியையும் என்னிடம் கேட்க வேண்டாம்’ என்று மு.க.அழகிரி சொல்கிறாரே?


! அரசியல் தொடர்பான எந்தக் கேள்வியையும் கேட்க வேண்டாம் என்று சொல்லும் உரிமை அழகிரிக்கு உண்டு. ஆனால், நான் அரசியலில் இல்லை என்று சொல்வது உண்மை அல்ல என்பது நெஞ்சுக்கு நீதி எழுதியவரின் மகனுக்குத் தெரியும். இப்படி சொல்லிக்கொண்டே அரசியல் செய்வதுதான் அழகிரியின் பாணி.

பாரதி முருகன், மணலூர் பேட்டை.

? 2017ல் தி.மு.க. தலைவர் பதவி மு.க.ஸ்டாலினிடம் வந்துவிடும் போலிருக்கிறதே?

! நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் ஸ்டாலின் நம்புகிறாரா எனத் தெரியவில்லையே?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!